வணிக முன்வடிவு
தேசிக்ரூ நிறுவனத்தின் கிராமிய விநியோக முன்வடிவு என்பது உத்திபூர்வமான நோக்கத்துடன் தெரிவு செய்த கிராமங்கள் மற்றும் பகுதி அளவில் நகர அமைப்பு கொண்ட இடங்களில் நுண்ணிய மையங்களின் ஒரு வலையமைப்பை அமைப்பதேயாகும். ஒவ்வொரு மையமும் 25 நபர்கள் அமர்ந்து பணிபுரியக்கூடிய வகையிலும், இரண்டு முறைப்பணிகள் கொண்டதாகவும், மேலும் உலக அளவிலான வாடிக்கையாளர்களுக்கு பின்-பக்க வசதிகளை வழங்குவதற்குத் தகுந்த முறையில் உத்தியோகபூர்வமான ஆற்றலுடன் இயங்கும் மையங்களாக அமையும். இது போன்ற நுண்ணிய மையங்கள் பத்தாயிரம் முதல் நூறு ஆயிரம் ஜனத்தொகை கொண்ட இடப்பகுதிகளில் அமைக்கப்பெறும். இவ்வகையான மையங்களில் படித்த ஆனால் குறைவாக வேலை வாய்ப்புடன் கூடிய மக்களை தெரிவு செய்து, அவர்களுக்கு தகுந்த முறையில் பயிற்சிகள் வழங்கி, மேலும் அவர்கள் பணியில் அமர்த்தப் படுவார்கள். இந்த முன்வடிவால் கிடைக்கப்பெறும் நன்மைகள்:
- கணினியை மையமாகக் கொண்ட, மற்றும் அறிவாற்றல் சம்பந்தப்பட்ட வேலைகளை உருவாக்குதல், மேலும் அது போன்ற பணிகள் குறித்த இடத்தில் இதற்கு முன் வழங்கப்படாமல் இருக்க வேண்டும்.
- வேலையை விட்டு விலகுதல் என்பது குறைந்து விடும், வேலையில் இருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயந்து காணப்படுவதாலும் மேலும் அவர்கள் அவர்களுடைய ஊரிலேயே குடும்பத்தை பிரிய வேண்டிய சூழ் நிலை இல்லை என்பதாலும் அவர் அங்கேயே வேலையில் இருக்க விரும்புவர்.
- வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவுகள், ஏன் என்றால் இந்த மையங்களில் ஆகும் செலவுகள் நகரத்து மையங்களில் ஆகும் செலவுகளை விட குறைந்ததாகும்.

