• முகப்பு
  • வேலைவாய்ப்புகள்
  • தேசிக்ரூ நிறுவனத்தில் பணிபுரிவது

Careers Working with us

" Choose a job you love, and you will never have to work a day in your life"-Confucius

வேலைவாய்ப்புகள்

"நீ நேசிக்கும் ஒரு வேலையைத் தெரிவு செய்தால், உன் வாழ்க்கையில் ஒரு நாள் கூட நீ வேலை செய்ய வேண்டி வராது.” - கன்பூஷியஸ்.

கன்பூஷியஸ் சொன்னதின் தொடர்ச்சியைச் சொல்ல வேண்டுமானால், “நீ நேசிக்கும் ஒரு வேலையைத் தெரிவு செய்தால் உனது அறைக்குள் உட்கார்ந்து கொண்டு உனது நம்பிக்கைகளும் கனவுகளும் என்னவானது என்று விட்டத்தைப் பார்த்து நீ சிந்திக்க வேண்டியிருக்காது” என்று கூறலாம். ஒருவர் தனது கனவுகளைத் துரத்துவது என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை தேசிக்ரூ நிறுவனத்தில் நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம், அங்கீகரிக்கிறோம்.

கனவுகளுடனும் உழைப்பதற்கான ஆர்வத்துடனும் வரும் மனிதர்களுக்கு அவசியமான ஒரு சுமூக சூழ்நிலையை உருவாக்கித் தருவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். வெளிப்படையான செயல்பாடு மற்றும் மதிப்புகள் குறித்த தேசிக்ரூ கலாச்சாரம் அனைவரும் பங்குபெறும் வளர்ச்சியை உறுதி செய்வதோடு அனைத்து மட்டத்திலுமான பங்களிப்பையும் உறுதிசெய்கிறது.

எங்களது மனித வள தத்துவம் மிக எளிமையானது. “நாங்கள் எங்கள் ஊழியர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறோம். அவர்கள் தங்களது வேலையை மேம்படுத்திப் புரிகின்றனர். அது எங்களது வாடிக்கையாளர்களை மகிழ்வுடன் வைத்திருக்கிறது.”

நாங்கள் ஒரு ஐஐடி சென்னையில் அடை காத்த, நல்ல நிதி வசதிகளுடன் கூடிய, மற்றும் நன்றாக நிறுவிய இளம் நிறுவனமாகும், மேலும் தற்பொழுது நாங்கள் வளர்ச்சிப் பாதையின் முதல் படியில் காலடி எடுத்து வைத்துள்ளோம். நாங்கள் எங்கள் விரைவாக வளர்ந்து வரும் நிறுவனத்திற்கு மிகவும் சூட்டிகையுட்னும், சுறுசுறுப்புடனும் கூடிய இளைஞர்களை வரவேற்கிறோம்.

எனவே, கனவுகளைத் துரத்தும் எங்களது இளையோர் குழுவின் ஒரு பாகமாக ஆக நீங்கள் விரும்பினால், அல்லது அதனைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் தோன்றினால் info@desicrew.in மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

"தேசிக்ரூ வேலைகள் வழங்குவதற்கு பணமோ, அல்லது வைப்புத்தொகையோ, எதிர்பார்க்கவில்லை. அங்கு பணி புரியும் அனைவருக்கும் சட்ட ரீதியிலான வேலை அளித்தலுக்கான கடிதங்கள் வழங்கப்படும்."

தேசிக்ரூவை பற்றி

தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி லாபம் உருவாக்கும் ஒரு சமூக நிறுவனத்தை நாங்கள் நிறுவியுள்ளோம். அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்படாத இந்த வணிக மாதிரி வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த ஒப்பந்த சேவை தீர்வை வழங்குவதுடன் ஏராளமானோருக்கு அர்த்தம் செறிந்த வேலைவாய்ப்புகளையும் வழங்குகிறது.

Got a Question? Get in touch with us