News Room Whats happening!

வாடிக்கையாளரின் வெற்றிகள்

துறை : காப்பீட்டுத்துறை

பிரதான சேவை: புதிய வியாபார அமைப்பாக்கமுறை

இந்தியாவின் காப்பீட்டுத் துறையைச் சேர்ந்த ஐந்து முன்னனி நிறுவனங்களில் ஒன்று, தங்களின் சந்தை விரிவாக்கத்திற்குப் பின்னர், புதிய காப்பீட்டு கோரிக்கைகளின் மதிப்புகளை இலக்கமுறைக்கு மாற்ற விரும்பியது. எங்கள் குழு நாளொன்றுக்கு ஏறத்தாழ 2200 படிவங்களைச் செய்து முடித்தது. அதிகபட்சமாக நாளொன்றுக்கு 3500 படிவங்களையும் கூட முடித்தளித்தது. மாறுபடும் கோரிக்கைக்கு ஏற்ப திட்டமிட்ட கட்டண செலவைக் குறைக்கவும், திட்ட வேலைகளைக் கணக்கிடவும் எங்கள் சேவைகள் வாடிக்கையாளருக்கு உதவியது. அத்துடன் புதிய வியாபார கையகப்படுத்தலில் அவர்களின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கவும் உதவியது.

குறிப்பிட்ட வழக்கு ஆய்வினை முழுமையாக படிக்கவும்

துறை: இணையம் மற்றும் அலைபேசி

பிரதான சேவை: நேரடி அரட்டை சேவை

அலைபேசி மதிப்பு கூடுதல் சேவைகள் பிரிவில் ஒரு புதிய தொடக்கமாக, செல்பேசி பயனர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு மதிப்பார்ந்த பதிலை அளிக்கும், ஒரு செல்பேசி பொறியை நாங்கள் உருவாக்கினோம்.

வாடிக்கையாளரின் தகவல்களஞ்சியங்களில் அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் இல்லாததால், இணைய தேடல் மூலமாக பயனர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு 5 நிமிடங்களுக்குள் பதிலளிப்பதன் மூலமாக, நேரடி உதவிச்சேவையை வழங் அந்த வாடிக்கையாளர் நிறுவனம் தேசிக்ரூவைத் தொடர்பு கொண்டது. கேள்விகளைத் தெளிவாக புரிந்து கொள்ளவும், சரியான பதிலைக் கண்டறிய இணையத்திலிருக்கும் தகவல்களஞ்சியங்கள் மூலமாக தேடவும், கேள்விக்கு மதிப்பார்ந்த பதிலை அளிக்கவும், தகவல்களஞ்சியத்தை மேற்கொண்டு தானியத்திற்குக் கொண்டு வர தேவையான அடிப்படை பகுப்பாய்வுகளைச் செய்யவும், தகவல் களஞ்சியங்களில் கேள்வி-பதில்களை ஒழுங்கமைக்கவும், கேள்வி-பதில் பகுதிக்கான முன்னிருப்பு சேதிகளைத் தயாரிக்கவும் குறுந்தகவல் மொழியைக் குறியீடாக்க இந்த பணியில் தேசிக்ரூ உறுப்பினர்கள் தேவைப்பட்டார்கள்.

குறிப்பிட்ட வழக்கு ஆய்வினை முழுமையாக படிக்கவும்

துறை : சந்தை ஆய்வு

பிரதான சேவை: படியெடுத்தல்

இந்த சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனத்திற்கு எங்கள் குழு ஒலிக் கோப்புகளின் வடிவமைப்பு மாற்றம், படியெடுத்தல் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகிய சேவைகளை செய்தளித்துள்ளது. இது வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு தனது துறையின் கருத்துக்கள் மற்றும் வாடிக்கையாளர் கருத்துகள் குறித்த விவரங்களை சரியாகப் பயன்படுத்த உதவியுள்ளது.

எங்களது குழு பதிவு செய்யப்பட்ட கருத்துக் கணக்கெடுப்புகளின் ஒலி நாடாக்களை முதலில் எம்பி3 அல்லது வேவ் (wav) கோப்புகளாக மாற்றுகிறது. அதன்பின் இந்த கருத்துக் கணக்கெடுப்புகள் எழுத்து ஆங்கிலத்திற்கு படியெடுக்கவும் மொழிபெயர்க்கவும் படுகின்றன. எங்களது குழு மாதத்திற்கு 20-30 மணி நேரங்கள் வேலை செய்வதுடன் துவங்கியது. இன்று (ஆகஸ்டு 2009) மாதத்திற்கு 120 மணி நேரங்கள் வேலை நடக்கிறது. அத்துடன் இக்குழுவின் உற்பத்தித் திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டும் வருகிறது. முதல் இரண்டு மாத கற்றல் காலத்திற்குப் பிறகு, இப்போது வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட எந்த வேலையிலும் மறுவேலை செய்து தர அவசியம் நேர்வதில்லை. ஒலிக் கோப்புகளை எண்முறைக்கு மாற்றுவதால் பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு அது நவீன முறையில் நிர்வகிக்கத்தக்க வள ஆதாரமாக ஆகிறது. அத்துடன் படியெடுத்தல்/மொழிபெயர்ப்பு வேலை சந்தை ஆய்வு நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிப்பதோடு நிறுவனத்தின் நடப்பு ஆதாரங்கள் மூலம் கிடைக்காத செலவினக் குறைப்பு அனுகூலத்தையும் அளிக்கிறது. அனைத்து படிகளும் வாடிக்கையாளரிடம் திருப்பி அளிக்கப்பட்டு விடுகின்றன.

குறிப்பிட்ட வழக்கு ஆய்வினை முழுமையாக படிக்கவும்

துறை: இணையம் மற்றும் அலைபேசி

பிரதான சேவை: வலைக் கண்காணிப்பு

தரமான பயன்பாட்டு அனுபவத்தை அளிக்கும் பொருட்டு, எங்களது குழு இந்த உலகளாவிய இணைய வலைவாசலுக்கு வலை கண்காணிப்பு உதவியை வழங்குகிறது.

எங்களது குழு 4 கண்டங்களில் உள்ள 10 வெவ்வேறு நாட்டு இணையதளங்களை குறிப்பாக அத்தளங்களின் மிகைஇணைப்பு செயல்பாட்டினை குறிப்பான கவனத்துடன் பரிசோதிக்கிறது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மிகைஇணைப்பு திட்டமிட்டவாறு வேலை செய்யவில்லை எனத் தோன்றுமானால், எங்களது குழு அந்த பிரச்சினையை ஒருமுறைக்கு இருமுறை பரிசோதித்து அனைத்து பிழைகளையும் சரிசெய்வதற்கான கருத்துகளை வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கிறது. இந்த தர உதவி சேவை இணையதள செயல்பாட்டின் ஒரு அடிப்படையான மையப் பணி என்பதால் வாடிக்கையாளருக்கு இது ஒருங்கிணைந்த சேவையாக அளிக்கப்படுகிறது. தேசிக்ரூ குழு சராசரியாக ஒரு நாளைக்கு 1000 மிகைஇணைப்பு கிளிக்குகளுக்கு பொறுப்பு கொண்டுள்ளது. இது இன்னும் விரிவுபடுவதற்கான சாத்தியமுள்ளது.

குறிப்பிட்ட வழக்கு ஆய்வினை முழுமையாக படிக்கவும்

துறை: சமூகத் துறை

பிரதான சேவை: தரவு உள்ளீடு (எண்முறையாக்கம்)

குழந்தை கல்வி மீது கவனம் செலுத்தும் இந்தியா முழுவதிலும் கிளைகள் கொண்டிருக்கும் இந்த அரசு சாரா அமைப்புக்கு அவர்களது பெரும் அளவிலான கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் வருடாந்திர மாணவர் மதிப்பீடுகள் போன்ற பல்வேறு தரவு உள்ளீட்டுத் திட்டப்பணிகளை (இப்போது மொழிபெயர்ப்பு திட்டப்பணிகளும்) நாங்கள் செய்தளித்திருக்கிறோம்.

இந்த வாடிக்கையாளருக்கு உயர் அளவிலான கணக்கெடுப்புகளை பரிசீலிக்கவும் ஆயவும் அவசியமாயிருக்கிறது. தரவின் அளவு அதிகமாய் இருப்பதால் அவர்களுக்கு நிர்வகிக்க சிரமமளிப்பதாய் ஆகி விடுகிறது. அத்துடன் பல மற்ற சமூகத் துறை அமைப்புகளைப் போலவே இந்த அமைப்புக்கும் புதிய அளவிலான, வடிவிலான, நிதியளவிலான திட்டப் பணிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். புதிய பணிகளை அவசியத்தின் அடிப்படையில் உள்ளெடுப்பது, மற்றும் உயர்ந்த தரம் மற்றும் குறைந்த வேலை நிறைவுக் காலத்தை குறைந்த செலவில் சாதிப்பது ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் எங்களது திறம்பட்ட திட்டப்பணி மேலாண்மைக் கருவிகள் மூலமாக தீர்க்க உதவி ஒரு இந்திய அரசு சாரா அமைப்புக்கு நாங்கள் எங்களது நிபுணத்துவத்தையும் திறனையும் நிரூபித்துள்ளோம்.

குறிப்பிட்ட வழக்கு ஆய்வினை முழுமையாக படிக்கவும்

துறை: மின்-ஆளுகை

பிரதான சேவை: திட்ட மேலாண்மை

ராஜஸ்தான் அரசாங்கம் மாநிலம் முழுவதிலும் அனைத்து பெண்களுக்கும் “பாமாஷா” என்கிற செயல்சிறப்பு அட்டைகளை வழங்க முன்முயற்சி மேற்கொண்ட சமயத்தில், 4 மில்லியனுக்கும் அதிகமான படிவங்களை இரண்டு மாத காலத்தில் தர நிர்ணயத்திற்கு இணக்கமுற்ற வகையில் எண்முறையாக்குவதற்கு தேசிக்ரூ நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது.

அந்த சமயத்தில் எங்களது குழு 1000 தொழில்முறைப் பணியாளர்களை பயிற்றுவித்துக் களமிறக்கியது. வாடிக்கையாளரின் 40 தரவு உள்ளீட்டு மையங்கள் மற்றும் வருடல் மையங்களுடன் தகவல் ஒருங்கிணைப்பு செய்து கொண்டு ஆங்கிலம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளிலான 4.1 மில்லியன் படிவங்களை பரிசீலனை செய்தது. கடுமையான நேர நெருக்கடியிலும் பல செயல்பாட்டுச் சவால்கள் வெற்றிகரமாகக் கடக்கப்பட்டன. இந்த திட்டம் ஒரு தீவிர திட்ட மேலாண்மை நடவடிக்கையாக அமைந்ததுடன் பயனரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வெற்றிகரமாய் முடிவடைந்தது.

குறிப்பிட்ட வழக்கு ஆய்வினை முழுமையாக படிக்கவும்

துறை: இணையம் மற்றும் அலைபேசி

பிரதான சேவை: உள்ளடக்கம் உருவாக்கல்

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பணியில் உலகின் முன்னணியில் இருக்கும் இணைய நிறுவனங்களில் ஒன்று பூகோள அமைவிட விவரக் கருவி ஒன்றிற்கு தரவை உருவாக்குவதற்கு தேசிக்ரூ நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளது. போதுமான வரைபட தரவு இல்லாத பல்வேறு நாடுகளில் உள்ள சாலைகள், முக்கிய இடங்கள் போன்ற தரவு விவரங்களை இது வரைபடமிடுகிறது.

தேசிக்ரூ குழு வலையில் இரண்டாம் நிலை ஆய்வு செய்து அவசியமான தகவல்களின் தரவுத்தளங்களை உருவாக்குகிறது. ஒரு வலை அடிப்படையிலான கருவியைக் கொண்டு சாலைகள், இருப்புப் பாதைகள், முக்கிய இடங்கள் போன்றவை வரையப்படுகின்றன. இக்குழு நிலவமைப்பியலில் அறிவுத் திறனை கட்டியெழுப்பியுள்ளதோடு உலகெங்கிலும் 55 க்கும் அதிகமான நாடுகளில் உள்ள முக்கிய இடங்களை வரைபடத்தில் குறித்துள்ளது. தேசிக்ரூ குழு முன்னர் நிபுணத்துவம் இல்லாத துறைகளிலும் விரைவாக தனது திறனை வளர்த்துக் கொள்ளத்தக்கது என்பதை இந்த நடவடிக்கை நிரூபணம் செய்துள்ளது. இதனையடுத்து அந்த உலக நிறுவனம் அறிவு அடிப்படையிலான ஊழியர் வேலை செறிந்த செயல்பாட்டு வாய்ப்புகளை தேசிக்ரூ நிறுவனத்துடன் செய்வதற்கு ஆலோசித்து வருகிறது. இதன்மூலம் அந்த நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களை இன்னும் உயர் மதிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே சமயம் நடப்பு செலவுகளில் சுமார் 50% வரை சேமிக்க முடியும்.

குறிப்பிட்ட வழக்கு ஆய்வினை முழுமையாக படிக்கவும்
மேல் செல்ல

வாடிக்கையாளர் வார்த்தைகள்

"செயல்படுத்தும் வேகம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் தேவைகளைப் புரிந்து கொள்வதும், பின்னர் அதற்கேற்ப அணுகுமுறைகளை அபிவிருத்தி செய்வதும் மிகவும் திருப்திகரமாக உள்ளது.""

"தேசிக்ரூ உண்மையிலேயே எங்களுக்கு மிகச் சிறப்பாக உதவி இருக்கிறார்கள். மேலும் 2008-ஆம் ஆண்டு ஜூன் 26-27 தேதிகளில் அவர்கள் செய்த அருமையான பணியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.... "

"தேசிக்ரூவின் திரு உண்மையிலேயே எங்களைப் புரிந்து கொண்டு, மிகவும் ஒத்துழைப்பு வழங்கினார். அவர்களின் தரம் மற்றும் செயல்முறை பயிற்சி குறித்து கூறுவதானால், அவர்களுடன் எங்களுக்கு எந்த சிக்கலும் ஏற்பட்டதே இல்லை. "

"தொழிலை விரிவாக்குவதில், நாங்கள் நிச்சயமாக அவர்களுடன் இணைந்து மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். "

" உங்களைப் (தேசிக்ரூவைப்) போன்ற சிறந்த தொழில்முறை அமைப்புடன் இணைந்திருப்பதில், இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. "

"உங்களது குழுவின் (தேசிக்ரூ) ஒவ்வொரு உறுப்பினரது அர்ப்பணிப்பு உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அவர்களது உண்மையான உழைப்பு மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். "

பரிசோதனைரீதியாக, எங்கள் திட்டங்களில் ஒன்றில் செயல்பட நாங்கள் தேசிக்ரூவை நியமித்தோம். தொடக்கத்தில் பரிசோதனையாக கருதப்பட்ட ஒன்று, பின்னர் சிறந்த பலன்களுடன் வெற்றிகரமான ஒன்றாக மாறியது.... "

தேசிக்ரூ அதன் பணிமுறையின் மூலமாக, ஆழமான அர்பணிப்பையும், ஒழுங்கமைப்பையும் எடுத்துக்காட்டி உள்ளது. எந்தளவிற்கு என்றால், எங்கள் வெற்றியில் தேசிக்ரூவும் ஓர் உள்ளார்ந்த பாகமாக மாறிவிட்டது. "

ஒவ்வொரு புதிய காலாண்டிலும், அவர்களின் சேவைத்தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் எதிர்கால திட்டங்களில் தேசிக்ரூ நிச்சயம் இடம் பெற்றிருக்கும். "

தேசிக்ரூவின் அனுகூலங்கள்

தேசிக்ரூவும், அதன் குழு உறுப்பினர்களும்

தொழிலுக்கான எங்களின் மதிப்பார்ந்த அணுகுமுறை, எங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கும் (வாடிக்கையாளர்கள், மக்கள், சமூகம் மற்றும் தொழில்) முழுமையான இலாபங்களை அளிப்பதுடன், தேவையான சமூக மாற்றங்களையும் உருவாக்கி அளிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us