அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பொதுவானவை
கூட்டாண்மைக்குரிய நிறுவனங்களுக்கு உங்கள் நிறுவனம் எந்த வகையிலான சேவைகள் / சொலுஷன்ஸ் தீர்வுகளை அளிக்கிறது?
>நாங்கள் முதன் முதலில் தரவுப் பதிவிடல் மற்றும் தரவுகளை மாற்றியமைத்தல் போன்ற எண்முறைப்படுத்தல் சேவைகளை கூட்டாண்மை நிறுவனங்களுக்கு வழங்கி வந்தோம். நாளாக ஆக, தன்னம்பிக்கை வளர்ந்தது மேலும் நாங்கள் புதியதாக உள்ளடக்கம் உருவாக்குதல் மற்றும் தகுதி பெறவைத்தல், ஜிஐஎஸ் வழிமுறை சார்ந்த வரைபட சேவைகள், ஒலிப்புக்கேற்ப வரைதல் மற்றும் உள்ளூர்மயமாக்குதல் போன்ற சேவைகளையும் வழங்க முன்வந்தோம். இன்று காணப்படும் தொழிலில் பின்னடைவு சார்ந்த சூழ்நிலைகளில், வாடிக்கையாளர்கள் தமது செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் அவர்களுடைய பல்வேறு மதிப்பு குறைந்த பின்-நுனி அலுவலக சேவைகளை எங்களுக்கு ஒப்படைப்பதையே விரும்புகிறார்கள். எங்கள் சேவைகள் குறித்த விரிவான தகவல்களுக்கு மேலும் பார்க்கவும்
உங்கள் வணிக முன்வடிவு எந்த வகையை சார்ந்தது?
>நாங்கள் ஒரு பரவலாக விநியோகிக்கப்படும் செய்முறை முன்வடிவத்தை பின்பற்றி வருகிறோம், அதன் படி எங்களுடைய சென்னை அலுவலகம் வாடிக்கையாளர் மற்றும் கிராமப்புற மையங்களுக்கு ஒரு இடைமுகமாக செயல்படும். இரண்டாம் பட்சமான ஊர்கள் மற்றும் கிராமங்களில் இருந்து மையங்கள் பணி புரிவதால், உபரி செலவுகள் கணிசமாக குறைந்தும், மேலும் அவற்றை அப்படியே வாடிக்கையாளர்கள் பயன் படும் வகையில், அவர்களுக்கே குறைந்த செலவுகளை வழங்கி, அவர்கள் நிலைப்புத்தன்மையை மேலும் கூட்டுகிறோம். கிராமப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இதனால் வேலை வாய்ப்புகள் கிடைப்பதோடு, அவர்களுடைய உள்கட்டமைப்பும் நாளடைவில் வளரும், அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு ஆகும் தற்போதைய செலவுகளில் 40% வரை செலவுகளை குறைத்து, அதற்கான ஆதாயத்தையும் பெறலாம். எங்கள் எதிர்கால திட்டங்கள் பற்றி மேலும் அறிய மேலும் படிக்கவும்.
தற்பொழுது நீங்கள் எத்தனை கிராமப்புறம் சார்ந்த (பிபிஒ)வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் மையங்களை நடத்தி வருகிறீர்கள்?
தற்பொழுது தமிழ் நாட்டில் சென்னை, பல்லடம், சேலம், அப்பகூடல், கொல்லுமாங்குடி மற்றும் திருக்குவளை ஆகிய மையங்களில், ஆறு விநியோக மையங்களை அமைத்துள்ளோம்.
இரவு நேரத்தில் அவர்கள் உறங்காமல் பணி புரிய நீங்கள் என்ன யுக்தியை கையாள்கிறீர்கள்?
- எங்கள் வாடிக்கையாளர்கள் ஆச்சரியப் பட்டு "நாங்கள் தேசிக்ரூ நிறுவனத்தை பரிந்துரை செய்கிறோம் !" என்று சொல்லுமளவிற்கு புதிய செய்முறைகளை கையாண்டு வருகிறோம்.
- சிறந்த தொழில்நுட்பத்தை பரவலான பணிபுரியும் சூழ்நிலையில் தரமான வகையில் விநியோகம் செய்து அதன் மூலமாக பல கிராமங்களை இணைத்து வழங்குதல்
- எங்களுடைய புதிய மற்றும் முதல் தலைமுறையை சார்ந்த சிறந்த அறிவாற்றல் கொண்ட ஊழியர்களுக்கு சிறந்த திறமை வளர்க்கும் புதிய உத்திகளை கையாள உகந்த முறையில் பயிற்ச்சிகள் மூலம் வளர்ப்பது.
- தற்பொழுது எங்கள் குழுவில் சில நூறு மக்களே பணி புரிந்து வருகிறார்கள் - ஆனால் உண்மையில் வேலை வாய்ப்பே இல்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான வேலையில்லாத இளம் மக்களுக்கு எதிகாலத்தில் இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
- என்றும், எப்பொழுதும், மேலும் நம்மை நாமே உயர்த்திக்கொள்ள பல வழிகள் மற்றும் உத்திகள் உள்ளன என்பதை உணர்ந்து செயல்படுதல்.
பொதுவாக உங்கள் யோசனையின் உயர்ந்த வகையிலான உள்நோக்கம் என்ன?
எங்கள் நீண்டகாலக் கனவு எதிகாலத்தில் இந்தியாவின் பொருளாதார புவியியல் சார்ந்த இடப்பகுதிகளை மேலும் விரிவாக்கி, கிராமங்களில் வேலை இல்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு அவர்கள் இருக்கும் கிராமங்களிலேயே தரமான வேலைவாய்ப்புகளை வழங்கி நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அதனால் ஏற்படும் ஆதாயங்களை பிசிறில்லாமல் வழங்கி அவர்களுடைய போட்டியிடும் தகுதிக்கான வளங்களை மேலும் வளர்த்து பெருமை சேர்த்தல். எங்கள் மூலதனம் எங்கள் திறமைகளை மேலும் வளர்த்து விரிவாக்கமடைதல், பல மொழிகளில் அனாயாசமாக சேவைகள் வழங்குதல், எங்களுடைய சமூக நோக்குடன் கூடிய உத்வேகத்தை பயன்படுத்தி, புதியதோர் உலகத்தை, வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் போன்ற புதிய தொழில் நுட்பங்களின் உதவியுடன் செயல்பட வைத்தல், மேலும் தொலைக் கட்டுப்பாடுடன் கூடிய உன்னதமாக செயல்படும் வணிக நடைமுறை ஒப்பந்தசேவைகளை தரமான முறையில் வழங்குதல், கிராமத்தை சார்ந்த புதுமை புகுத்தும் வணிக செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தி வழங்குதல் மற்றும் விநியோகித்தல், மேலும் பல இணையில்லாத வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவைகளை வழங்கி, அவர்களை உற்சாகப் படுத்தல் மேலும் இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் வளங்களைப் பெருக்கி பேணுதல் ஆகியவை அடங்கியதாகும். தேசிக்ரூ பற்றிய மேலும் தகவல்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் மேலும் படியுங்கள்
உள்கட்டமைப்பு
உங்கள் கிராமப்புற மையங்கள் எவ்வாறான உள்கட்டமைப்புகள் கொண்டவை?
எங்கள் கிராமப்புற மையங்கள் மிகவும் நவீனமான தற்காலத்து தொழில் நுட்பங்களுடன் மற்றும் உள்கட்டமைப்புடன் கூடியவை ஆகும் மேலும் அவற்றின் மூலம் நீங்கள் குறைந்தது 99% கொண்ட தடையில்லாத தொடர்ந்த சேவைகளை தவறாமல் பெறலாம்.
- தேவைக்கு மேற்பட்ட இணையதள தொகுப்புச்சேர்க்கை
- பி எஸ் என் எல் மற்றும் மைக்ரோவேவ் (எம்பிஎல்எஸ்)
- தேவைக்கு மேற்பட்ட மின்விசை அளிப்பு
- யு பி எஸ் மற்றும் மின்னாக்கிகள்
- பரணம் /பராமரிப்பு
- தனிக் கணிணிகளின் தொடர்ந்த பாதுகாப்பிற்கு எச் சி எல் நிறுவனத்துடன் கூடிய நீண்டகால ஒப்பந்தம், தேவைப்படும் உபரிகளை ஒவ்வொரு மையத்திலும் பாதுகாப்புடன் இருப்பில் வைத்தல்
- வழங்கிகளுக்கான மத்திய நிருவாக மையங்களை செயல்படுத்தல்
- அனைத்து மையங்களிலும் நல்ல தரமான உட்புற வடிவமைப்பை வழங்க நியமமாக்கும் நடவடிக்கை
- உயிரி-பதிவு முறை சார்ந்த அணுக்க முறைமை கட்டுப்பாடு (தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது)
ஆக்க சக்தி அல்லது தொகுப்புச்சேர்க்கை போன்றவை ஒரு சவாலாக உள்ளதா?
எங்கள் தேவைக்கு மேற்பட்ட மின்விசை அளிப்பு - கூடாமல் யுபிஎஸ் மற்றும் மின்னாக்கிகள் கைவசம் இருப்பதால், ஆக்க சக்தியையைப் பெற்று வழங்குதல் மற்றும் தொகுப்புச் சேர்க்கை ஆகிய மின்சக்தி பயன்பாடுகளில் 99% தடையில்லாத தொடர் சேவைகளை வழங்கும் வசதிகள் உறுதியளிக்கப்பட்டுள்ளன.
மனித வளம்
ஒரு தனிப்பட்ட தனி மனிதனுக்கு பயிற்சிகள் வழங்கி அவன் தேசிக்றூ நிறுவனத்தில் பணிகளைத் தொடர்ந்து வழங்கும் திறமையைப் பெறுவதற்கு எத்தனை நாட்கள் பிடிக்கும்?
நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு மூன்று அடுக்குகள் கொண்ட பயிற்சிகளை வழங்குகிறோம்.
- பொதுவான பயிற்சிகள்
- இதில் ஆறு* முதல் எட்டு வாரங்கள் கொண்ட அறிமுக பயிற்சிகளும் அடங்கும்
- பயிற்சிகள் வழங்கும் பங்காளிகளுடன் பயிற்சியின் நேரத்தை குறைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
- செயல் முறை விளக்கப் பயிற்சி
- 2-4 வாரங்கள் கொண்டது
- ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப் பெற்றது
- குறிப்பிட்ட வசதிகள் கொண்ட பணியிடத்தில் வழங்கப்படுவது.
- பணியிடத்தில் பணிக்கான பயிற்சி
- 1-2 வாரங்கள் கொண்டது
- பணியிடத்தில் வடிவமைக்கப் பெற்றால் அப்படியான வசதிகளுக்கான தொழில் நுட்பம் மற்றும் வசதி ஆதாரங்கள் கிராமப்புற மையங்களில் உள்ளனவா என்பதை உறுதி செய்யுங்கள்
சமூக தாக்கவிளைவு
உங்கள் புத்தம் புதிய செயல்பாடுகள் தனிமனிதனைத் தவிர்த்து வேறு ஏதேனும் வழிகளில் கிராமப்புறங்களில் சமூகத் தாக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளதா? ஆம் என்றால், எப்படி? கிராமப் புறங்களில் வாழ்க்கைத்தரம் இதனால் மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளதா? ஆம் என்றால், எப்படி?
இது போன்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும், நாங்கள் இதுவரை மேற்கொண்ட பயணம் சிறிய தூரத்தை மட்டும் கடந்த தாகும், மேலும் நாங்கள் அந்த இடத்திற்குத் தான் செல்ல விழைகிறோம். நாங்கள் முதன் முறையாக நாங்கள் பணிபுரியும் கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசைகள் கொண்ட சேவைகள் மற்றும் இணைப்புகளை வழங்கியதற்கு மிகவும் பெருமைப்படுகிறோம். எங்கள் குழுவில் பெரும்பான்மையாக இளம் வயதுடைய பெண்கள் ஊழியர்களாக வேலை செய்வதற்கும் நாங்கள் பெருமைப்படுகிறோம், இதனால் பெற்றோர்கள் பெண்களுக்கு கல்வி வழங்குவதற்கான முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளார்கள்; பரம்பரை பரம்பரையாக இவர்கள் யாவரும் திருமணம் புரியும் வரை வீட்டிலேயே அடைபட்டு, மேலும் வீட்டு வேலைகள் செய்தே பழக்கப்பட்டவர்கள் ஆவார்கள். வெளி உலக அறிவு இல்லாமலும், மற்றவர்களை சார்ந்தே வாழும் அவல நிலைமையில் அவர்கள் இது வரை வாழ்ந்து வந்தனர்.
தேசிக்ரூ நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் வருவாயை ஈட்டி, அவர்கள் அதனை உள்ளூர் சமூகம் மற்றும் சமுதாயத்தின் சொத்துக்களை பரவலாக பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி கண்டு வருகிறார்கள். பெரிய அளவில், இந்த கிராமப்புறத்தை சார்ந்த வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் (பிபிஒ) முன்வடிவ மாதிரி, சமுதாயத்தில் மேலும் பல இனிய தாக்கவிளைவுகளை ஏற்றெடுக்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது, ஏன் என்றால் இந்தியாவின் ஜனத்தொகையில் 70% மக்கள் கிராமத்தை சார்ந்தே வாழ்கின்றனர். ஒரு உதாகரணமாக, ஐம்பது நபர்கள் கொண்ட ஒரு குழு ஆயிரம் ஊர்கள் மற்றும் கிராமங்களில் வேலை செய்து, மாதம் ரூபாய் ௫5000 (அதாவது சுமார் ~100 USD) சம்பாதித்தால், மாதம் ஒன்றிற்கு சுமார் ரூபாய் 250 மில்லியன் வரை உள்ளூர் வாசிகள் வழியாக சமூகத்தினருக்கு வந்து சேரும் (அதாவது சுமார் ~5 மில்லியன் USD) ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, சராசரியாக ஒரு குடும்பத்தின் வருமானம் சுமார் ரூபாய் 1500 ஆக ஒவ்வொரு மாதமும் இருக்கும் (~30 USD) இது போல் நாட்டின் மூலை முடுக்குகளில் நிகழ்ந்தால், அதன் மூலம் நாம் ஒரு சுமுகமான தாக்கவிளைவுக்கு காரணமாக அமையலாம் .எங்கள் சமூக தாக்கவிளைவுகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள மேலும் தொடர்ந்து கீழே பார்க்கவும்.
எதிர்கால திட்டங்கள்
உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன ? நீங்கள் உங்கள் செயல்முறைகளில் மேலும் விரிவாக்கம் செய்ய விரும்புகிறீர்களா?
நாங்கள் 2010 ஆண்டு முடிவடைவதற்குள் அனைத்து மாநிலங்களிலும் எங்கள் சேவைகளை வழங்கவும், மேலும் எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை 1000 க்கும் மேல் உயர்த்தும் நோக்குடன் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புரிந்து வரும் சேவைகளை மேலும் தரப்படுத்தி, மதிப்பீடு கூடியவையான சேவைகளை வழங்க ஆர்வம் மிக்க காணப்படுகிறோம். எங்கள் எதிர்கால திட்டங்கள் பற்றி மேலும் அறிய மேலும் படிக்கவும்.

