About Us Who we are!

The Adobe Creative Suite 3 Video Workshop offers over 200 training videos covering a wide range of subjects for print, web, and video professionals.

எங்கள் வரலாறு

எண்ணியுணரும் தேவைகள்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கிராமங்களில் இருந்து கணிசமான திறமைகளை பிபிஒ என்ற வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் ஈர்த்து வருகிறது. தேசிக்ரூவை சார்ந்த நாங்கள், இது போன்ற பணிகளை கிராமத்தில் இருக்கும் மக்களை நோக்கி சென்று பரீட்சார்த்தமாக சோதனை செய்து பார்க்க விரும்பினோம், மக்கள் வேலையைத் தேடி அலையும் பணியைத் தவிர்ப்பதற்காக. இந்தச் சோதனை நாங்கள் அடையாளம் காட்டிய இரு அடிப்படை தேவைகளை அடிப்படையாக கொண்டதாகும்.

சந்தையின் தேவை

சம்பள விகிதம் குறைந்து வருவதால், ஏறக்குறைய 100 விழுக்காடளவிற்கு அரைப்புத் தேய்வு காண்பதாக தொழில் முறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவை யாவும் விலை குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் பெரும் உற்பத்தி முறையில் உற்பத்தி செய்வதில் உகமம் காண்பதால் ஏற்படும் வினையாகும். இருந்தாலும், இவ்வகையான விளிம்பிற்குரிய சம்பளங்கள் ஊரை விட்டு நகரத்திற்கு ஓடி வரும் மக்களுக்கு அவர்களைப் பேணுவதற்கே போதாத அளவாகும், அதனால் தேவையும் வழங்கு நிலையும் சமசீர்க்கேடு அடைந்து காணப்படுகிறது. ஒரு ஊரை விட்டு இன்னொரு நகரத்திற்கு மக்கள் செல்லும் பொழுது, தங்கும் இடம், உணவு, பயணம் போன்ற தேவைகளுக்கு நேரம், அவகாசம் மற்றும் போதிய பணமும் இதர வசதிகளும் (மிதிவண்டி, வீடு, அடுப்பு, பாத்திரங்கள்) தேவைப்படுகின்றன, மேலும் தனி நபர் பாதுகாப்பும் கேள்விக்குறியாக அமையலாம். இந்த ஒருமுனைப்புப் தேசிக்ரூ முன்மாதிரி இந்த பணியாளர்கள் இடையே ஆன இடைவெளியை நிரப்ப முனைகிறது.

சமூகத் தேவைகள்

ஒஇசிடி (ஒர்கனைசேசன் போர் எகொநோமிக் கோ-ஒபேரேசன் அண்ட் டெவலப்மென்ட்) என்ற அமைப்பு இந்தியாவின் கிராமங்களில் 130 மில்லியன் படித்த பணியாளர்கள் வேலை கிடைக்க ஒரு நல்ல வழியும் இல்லாமல் திண்டாடுவதாக கணித்துள்ளனர். அவர்கள் முன் இருக்கும் ஒரே வழி குறைந்த அளவில் வேலை வாய்ப்புள்ள நகரங்களுக்கு குடி பெயருவதே, ஆனால் அங்கே சென்றால் வாழ்வதற்கான விலை கட்டுக்கு அடங்காமல் போகலாம். நமது தேசிக்ரூ நிறுவனம், நமது கிராமத்து மக்களின் ஆற்றலுக்கு தலை வணங்கி, அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, அவர்களுடைய நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்பதே குறியாக, செயல்பட்டு வருகின்றனர்.

அடிவேரிலிருந்து உருவாக்கம்

எங்களின் முன்னனி தொழில்வடிவம், சென்னை ஐஐடி பயிலகத்தின் கிராமப்புற தொழில்நுட்ப தொழில் காப்பகம் என்ற திட்டத்தின்கீழ் 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு தொடக்கத்தில், தொழில்துறை முகங்கொடுத்து வந்த இக்கட்டான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தேசிக்ரூ பிரைவேட் லிமிடெட் ஒரு வர்த்தகரீதியான நிறுவனமாக உயிர்பெற்றது. இதனூடாக, சமூக பொறுப்புமிக்க, வணிக நடைமுறைகள் ஒப்பந்தச்சேவை (பி.பீ.ஓ) மூலமாக இந்தியாவின் கிராம மற்றும் புறநகர் மக்களின் வாழ்க்கையிலும் அர்த்தமுள்ள மாற்றங்களை நாங்கள் ஏற்படுத்தி வருகிறோம்.

சேவைகள்

காப்பீட்டுத்துறை, சந்தை ஆய்வு, இணையம் & செல்பேசி சேவை, மின்-அரசாக்கம் மற்றும் சமூகம்சார் சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் உலக தரம்மிக்க சேவைகளை அளிக்க, எங்களின் கிராமப்புற தொழிற்சேவை வடிவமானது மக்களையும், செயல்முறைகளையும், தொழில்நுட்பத்தையும் தாங்கி பிடிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us