About Us Who we are!

எங்கள் மக்கள்

இயக்குனர்கள் குழு

ராஜீவ் குச்சால்

ராஜீவ் அவருடன் 22 வருடங்களுடைய நிர்வாக அனுபவத்தை கொண்டு வருகிறார் மேலும் அவர் இன்போசிஸ் டெக்நோலோஜீஸ் என்ற உலக அளவில் தகவல் தொழில் நுட்ப ஆலோசனைகள் மற்றும் சேவைகள் நல்கும் நிறுவனத்தில் 16 ஆண்டு காலங்கள் பணி புரிந்துள்ளார்.

ராஜீவ் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய முயற்சியான ப்ரோஜியோன் என்ற வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் (பிபிஒ) நிறுவனத்தை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர் ஆவார், அதில் அவர் முதலில் செய்பணிகளின் தலைவராகவும், பிற்பாடு வணிக உருமாற்றங்களுக்கும் தலைமை வகித்தார். அதற்குப் பிறகு அவர் மொபைல் நிறுவனத்தின் முதன்மை செய்பணி அலுவலராக பதவி ஏற்றார். ராஜீவ் ஐஐடி தில்லியில் படித்த ஒரு மாணாக்கன் ஆவார்.

ஒரு ஆரம்ப நிலை முதலீட்டாளராக அவர் தேசிக்ரூ நிறுவனத்தின் பொதுவான நோக்கத்தை பகிர்ந்து கொள்வதோடு, இந்தியாவின் சிறிய ஊர்கள் மற்றும் கிராமப்புரங்களில் வாழும் இந்திய இளைஞர்களின் இதுவரை பயன்படுத்தாமல் இருந்த திறமைகளை வெளிக்கொணர்வதில் மிகவும் ஆர்வத்துடன் காணப்படுகிறார். அவர் ஈட்டிய முதலீடு தேசிக்ரூ நிறுவனத்தை அவர்களுடைய துணிச்சல் மிகுந்த வளர்ச்சி வேகத்தை அடைய வைப்பது மட்டும் அல்லாமல், அவர்களுடைய மிகவும் புதுமையான தீர்வுகள் கொண்ட விநியோக முன் மாதிரியை தொடர்ந்து கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய எதிர்காலத்தை பெற்றுத்தந்து, மேலும் நகரம் சார்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகளையும் வழங்கி, அவர்களுடைய பெறுமதியை கூட்டுவதற்கு வழி வகுக்கும்.

மேலும்

டாக்டர். ஆர்த்தி கால்ரா

டாக்டர். ஆர்த்தி கால்ரா, ஐ ஐ டி, தில்லியில் இருந்து சமூக மானுடவியலில் பேரறிஞர் பட்டம் பெற்றுள்ளார் மேலும் கைத்தொழில்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியில் 20 வருடங்களுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ளார்.

இப்போது தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் இணைய சேவை சிறுமையங்கள் மூலம் கைத்தொழில் தொழில்முனைவு மேம்பாட்டில் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழக கல்வி நிறுவனத்தில் டெனெட் (TeNet) குழுவில் அவர் ஆலோசகராய் உள்ளார். கோயம்புத்தூரில் உள்ள டிஜே வடிவமைப்பு அகாதமியில் கவுரவ விரிவுரையாளராகவும் இருக்கிறார். 2005 ஆம் ஆண்டில் டெனெட் குழுவின் ஆராய்ச்சி திட்டப்பணியாக தேசிக்ரூ இருந்த சமயத்தில் இருந்தே அத்திட்டத்துடன் இவர் தொடர்புபட்டு இருக்கிறார். வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் சமூகம் ஆகியவை அவரது ஆர்வமிக்க துறைகளாகும். குறிப்பாக இந்தியாவில் உள்ள பன்முகப்பட்ட கலாச்சாரம் மற்றும் மொழி அமைப்புகளிடையே கணினித் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் மிகுந்த செயலூக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

மேலும்

சலோனி மல்ஹோத்ரா

புனே பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியாளர் பட்டம் பெற்ற சலோனி மல்ஹோத்ரா தற்பொழுது தேசிக்ரூ நிறுவனத்தின் தலைவராக செயல் படுகிறார்,

ஜனவரி 2005 ஆம் ஆண்டில் அவர் இந்த நிறுவனத்தை டாக்டர். ஜுன்ஜுன்வாலாவுடன் இணைந்து சென்னை ஐஐடி யில் உள்ள டெனெட் குழுமத்தில், தேசிக்ரூ நிறுவனத்தை நிறுவினார்.அவர் அவரது தொழில் வாழ்க்கையை ஒரு இடைவினைகளுடன் கூடிய புதியதாக தொடங்கிய ஊடக நிறுவனமான, வெப் சட்டினி என்ற தில்லியை சார்ந்த நிறுவனத்தில் துவங்கினார். சலோனி அவர்கள் தேசிக்ரூ நிறுவனத்தில் நடத்திய சாதனைகள் பிசினெஸ் வீக், பிசினெஸ் டுடே, தி எகொநோமிக் டைம்ஸ், பாஸ்ட் கம்பனி, தி ஹிந்து போன்ற பத்திரிகைகள் மற்றும் நாளிதழ்களில் பிரசுரம் ஆகியுள்ள்ளன. அவர் பிசினெஸ் வீக்கின் ஆசியாவின் மிகவும் வயது குறைந்த தொழில்முனைவராக பரிந்துரைக்கப் பெற்றார், எம்டி வியின் யூத் ஐகொனாக (இளம் உருவத்திருமேனி) தெரிவு செய்யப்பட்டார், இ அண்ட் வையின் 2008 ஆம் ஆண்டின் தொழில்முனைவராகவும், மற்றும் இந்தியாவின் ஜனாதிபதியின் முன்னிலையில் சிறந்த தொழில் முனைவராக சிஐஐ நிறுவனத்தினரால் கௌரவிக்கப் பெற்றார். சலோனி அவர்கள் தேசிக்ரூ நிறுவனத்தை நிறுவியவராகும் மேலும் தேசிக்ரூ நிறுவனத்தின் சந்தைப் படுத்துதல் மற்றும் நிறுவனத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

மேலும்

அறிவுரைக் குழுமம்

டாக்டர் அசோக் ஜுன்ஜுன்வாலா

டாக்டர் அசோக் ஜுன்ஜுன்வாலா சென்னை ஐஐடி யில் தொலைதொடர்பு மற்றும் கணினி இணையதளக் குழுவின் (TeNeT) தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்தியாவிற்கு பொருத்தமான தொழில் நுட்பங்களை மற்றும் தொழில்களை அவர்களுடன் இணைந்து மேம்படுத்தும் நோக்குடன் இக்குழு செயல்படுகிறது. இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமங்களின் சந்தைக்கு ஏற்ற தொலைதொடர்பு மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பல தொழில் நுட்பங்களை மேம்படுத்தி, இந்தக் குழுவினர் பல சிறந்த தொழில் நுட்பங்கள் கொண்ட பல நிறுவனங்களை அடை காத்து செயல்படுத்தியுள்ளனர் மேலும் அவை யாவும் இன்றும் டெனெட் குடும்பத்தினருடன் இணைந்து பங்காளிகளாக செயல்பட்டு வருகின்றனர். அவர் ரூரல் டேக்நோலோஜி மற்றும் பிசினெஸ் இன்க்யுபேடர் (ஆர்டிபிஐ) மற்றும் மொபைல் பேமென்ட் போரம் ஓப் இந்தியா (எம்பிஎப்ஐ) ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும் ஐஐடி, சென்னையில், செயல்படுகிறார்

இந்திய அரசு, அவருக்கு பத்ம ஸ்ரீ விருதை, 2002 ஆம் ஆண்டில் அளித்து கௌரவித்தது. டாக்டர். ஜுன்ஜுன்வாலா ஸ்டேட் பேங்க் ஓப் இந்தியா, டிடிஎம்எல், பிஇஎல், போலாரிஸ், 3i இன்போடெக், சாஸ்கென், தேஜஸ், ஐடிஆர்பிடி மற்றும் டாட்டா கம்ம்யுநிகேசன்ஸ் நிறுவனங்களின் குழுமங்களில் இயக்குனராகவும் செயல்படுகிறார். அவர் பிரதம மந்த்ரியின் அறிவியல் ஆலோசனை குழுமத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

மேலும்

ஆலோசகர்

ஜசிந்தா ஜெயச்சந்திரன்

இன்போசிஸ் வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் போன்ற முன்னிலை நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறையில் ஜசிந்தா 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராகும் மற்றும் இதற்கு முன் அவர் ஆன்மொபைல் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டுத்துறையின் தலைவராக பணி புரிந்து வந்தார்.

அவர் தனியாக அனைத்து மனித வள மேம்பாட்டுத்துறையின் தேவைகளை கவனித்து வந்தார் மற்றும் மக்களுடன் தொடர்பு கொண்டு சேவைகள் வழங்குவதிலும் ஈடுபட்டிருந்தார். அவர் தேசிக்ரூ நிறுவனத்திடமும் இணைந்து அவர்களுடைய திட்டங்கள் மற்றும் பயிற்ச்சிகள் ஆகியவற்றில் தமது ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

மேலும்

நிருவாகக் குழுமம்

மணிவண்ணன்

ஐஐஎம் பெங்களூருவில் இருந்து பட்டம் பெற்ற மணிவண்ணன் அவர்கள், பல பெரிய நிறுவனங்களில் தலைமைப் பதவியை வகித்து வந்தார் மேலும் தற்பொழுது புதிய நவீனமான சமூக நல திட்டங்களை செயல்படுத்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளார்.

வணிகம் மற்றும் சமூக நலத்துறையில் மாற்றங்கள் கொண்டு வருவதில் இவர் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளார் மேலும் பைராஜூ அமைப்பின் கிராம் ஐடி என்ற கிராமம் சார்ந்த வணிகச் செயலாக்க அயலாக்கப் பணிகளை அவரே முன் நின்று நடத்தி வைத்தார். தற்பொழுது அவர் இந்நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயலாக்க அலுவலராகவும் பணி புரிந்து வருகிறார். மணிவண்ணன் அவர்கள் தொழில் துறை சார்ந்த அனுபவம் பொறுத்தவரை அனைத்து துறைகளையும் கரை கண்டவராவார், அவர் அரசுப்பணிகளிலும் (இந்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தீர்வுகளில் அவர் தரவரிசையில் 44 ஆவது இடத்தை பிடித்தவராவார்), தனியார் துறை (ஐஸிஐஸிஐ வங்கி), மற்றும் இலாபம் ஈட்டாத அரசு சாரா நிறுவனம் (பைராஜூ அமைப்பு) ஆகியவற்றில் தனது முத்திரையை பதித்தவராவார். மேலும் அவர் நகரங்களில் மட்டும் அல்லாமல், கிராமங்கிலும் வேலைகள் செய்து, நல்ல திறமையான அனுபவம் கொண்டவராவார்.

வங்கி மேலாளராக இருந்ததால், அவர் புதிய திட்டங்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய செயலாக்கங்களில் தமது அனுபவத்தை பகிர்ந்து கொள்வார், மேலும் அவர் கிராமத்தினருடன் பணி புரிந்ததால், அவர்களுக்காக கூடிய மதிப்பீடுகளுடன் கூடிய திட்டங்களில் நாட்டம் கொண்டவராவார், மேலும் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு பொருளாதார ரீதியில் உரிய தீர்வுகளை வழங்கும் ஆற்றல் படைத்தவராவார். அவர் சிக்ஸ் சிக்மா ப்ளாக் பெல்ட் என்ற தகுதியை வென்ற ஒரு தலைவராவார் மேலும் அவரது தலைமை வகிக்கும் திறமைகளை பாராட்டும் வகையில் நியூ யோர்க்கின் நகர பல்கலைக்கழக்கம் அவருக்கு 'வெளிப்படும் தலைமைப்பதவி அனைத்துலக நபர்" என்ற கௌரவ பட்டம் வழங்கியது.

மேலும்

திருஞானம்

எஸ். திருஞானம் எலெக்ட்றோநிக்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவராவர் மேலும் பொறியாளர், தொழில்முனைவர், ஆசிரியர் மற்றும் மேலாளர் என்ற பல தரப்பட்ட 16 வருட அனுபவத்துடன் கூடியவராவர்.

அவர் தற்பொழுது தேசிக்ரூ நிறுவனத்தின் செய்பணிகளை கவனித்து வருகிறார், அவற்றில் ஆவண சேவைகள் வழங்குதல் பகுப்பின் செய்முறைகள், வருவாய் செலவு கணக்கு நிருவாகம், பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார்.

மேலும்

அஸ்வந்த்

ஒரு கனவுகளுடன் கூடிய தொழில் வினைஞர், இலட்ச்சியத்தில் மிதந்து கொண்டே அவற்றை விவாதிப்பவர், மற்றும் சீரிய எழுத்தாளர். அவர் சர்ரீ, இங்கிலாந்தில் உள்ள ப்ரொக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தில் இதற்கு முன் பணி செய்தவர் மேலும் எம்பிஏ முதுகலைப் பட்டம் பெற்றவர்.

அவர் இந்தியக் குடியரசு அரசுப்பணிகளில் ஒரு கை பார்த்துவிட்டு, தேசிக்ரூ நிறுவனத்தில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் நாட்களில் இருந்தே சென்னை ஆன்லைன் வலைத்தளத்தில் செய்தியாளராக பணி புரிந்தவர். லோயாலா டிபேட்டிங் குழுமத்தின் உறுப்பினர், காம்மேர்ஸ் போரத்தின் செயலாளர், மாணவர் இயக்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர். கென்ட் பிசினெஸ் பள்ளியின் மாணவ உறுப்பினர் மற்றும் கென்ட் டிபேட்டிங் குழுமத்தின் நிறுவனரும் அவரேயாவார். (2009) ஆண்டில் அவர் - எஜுகேசன், இளம் இந்தியர்கள் இயக்கத்தின் சென்னை கிளையின் தலைவராவார்.

மேலும்

பிரபாகர்

பிரபாகர் அவர்களுக்கு விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் 8 ஆண்டுகள் மற்றும் அனைத்துலக வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் (பிபிஒ) வில் 4 வருட அனுபவம் ஆக மொத்தம் 12 வருட அனுபவம் கொண்டவராவார்.

அவர் இதற்கு முனனால் உலகில் அனைத்து இடங்களிலும் கிளைகள் கொண்ட ஒரு சர்வதேச வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் (பிபிஒ) நிறுவனத்தில் 40 மக்கள் கொண்ட ஒரு அலகின் தலைவராக இரண்டு வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றவராவார், மற்றும் அடமானம் மற்றும் கிடைக்க வேண்டிய கணக்குகள் துறையில் மூன்று விதங்கள் கொண்ட மாற்றங்களில் அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்தி ஜெயித்தவர் ஆவார். மேலும் ஒரு கணக்கினை இந்தியாவில் இருந்து பில்லிபைன் நாட்டிற்கு முழுமையாக மாற்றியமைத்தவரும் ஆவார். அவர் வணிகவியலில் பட்டம் பெற்று தற்பொழுது தேசிக்ரூ நிறுவனத்தின் என்மயமாக்கும் பிரிவின் திட்ட செயலாக்க மேலாளராக செயல் புரிந்து வருகிறார்.

மேலும்

போரம்

போரம் தேசிக்ரூ நிறுவனத்தின் கணக்கு மற்றும் நிருவாகத்தினை ஆகஸ்ட் 2007 முதல் மேற்கொண்டு வருகிறார்.

அவர் மும்பை பல்கலைக்கழகத்தில் இருந்து மருத்துவமனை நிருவாகம் மற்றும் மேலாண்மையில் பட்டம் பெற்றுள்ளார். இதற்கு முன் அவர் இந்தியாவில் ஒரு முதன்மை தகவல் தொடர்பு சேவைகள வழங்கும் நிறுவனத்தில் பணி புரிந்தார்.

மேலும்

அனுஷா

அனுஷா ஆஸ்திரேலியாவில் இருக்கும் க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழத்தில் இருந்து உயிரியல் துறையில் முதுகலை பெட்டம் பெற்றவராவார்.

அவர் செப்டம்பர் 2008 ஆண்டிலேயே தேசிக்ரூ நிறுவனத்தில் சேர்ந்து, திட்ட செயலாக்கத்தை பொறுப்புடன் மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன்னால் அவர் பெங்களூருவில் சூழ்நிலையியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார்.

மேலும்

உதயா

உதயா ப்ரியா அண்ணா பல்கலைக்கழகத்தின் கம்ப்யுடர் அறிவியல் பிரிவில் பொறியாளர் பட்டம் பெற்றவராவார்.மேலும் கடந்த இரு வருடங்களாக தேசிக்ரூ நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

பத்மினி

பத்மினி அவர்கள் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் மற்றும் சிஏஐஐபி என்ற வங்கித்துறை பரீட்ச்சையிலும் தேர்வு பெற்றவர் ஆவார் மேலும் பொதுத் துறை நிறுவன வங்கியில் கடந்த 23 வருடங்களாக பணி புரிந்து, உயர்ந்த அனுபவம் கொண்டவர் ஆவார். அவர் விருப்ப ஒய்வு எடுத்துக்கொண்டார்.

அவர் வங்கி மற்றும் நிதி நிருவாக ஆலோசகராக பணியாற்றி வந்ததுடன், ஈயிடையில் தேசிக்ரூ பௌண்டேசன் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

மேலும்

மேல் செல்ல

சேவைகள்

காப்பீட்டுத்துறை, சந்தை ஆய்வு, இணையம் & செல்பேசி சேவை, மின்-அரசாக்கம் மற்றும் சமூகம்சார் சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் உலக தரம்மிக்க சேவைகளை அளிக்க, எங்களின் கிராமப்புற தொழிற்சேவை வடிவமானது மக்களையும், செயல்முறைகளையும், தொழில்நுட்பத்தையும் தாங்கி பிடிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us