மின்-அரசாங்கம்
தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தினை சரியான முறையில் அணுகும் பொழுது, மின்னாளுகை மூலமாக மேலும் பல மக்களுக்கு இதன் நன்மைகள் சென்றடையும், மின்னாளுகை மூலமாக மேலும் அனைத்து பொதுச் சேவைகளையும் தங்கு தடையின்றி, வெளிப்படையான முறையில், உடனுக்குடன் வழங்கலாம் மேலும் அதன் வழியாக மக்களுடனும் பரவலாக நேராக தொடர்பு கொண்டு, நன்மை தீமைகளை நன்கு அறிந்துகொண்டு, புதிய கோட்பாடுகளை உருவாக்கி, ஆட்சியை மேம்படுத்தலாம். அது மட்டுமல்லாமல், மின்னாளுகை மூலமாக உபரியாக மக்கள், பொருளாதாரம் மற்றும் சமூகத்தினர் அனைவரும் பல வழிகளில் பயன் பெறலாம், எடுத்துக்காட்டாக வரிசையில் நிற்க வேண்டிய நிர்பந்தம் இல்லை, இருந்த இடத்திலேயே அல்லது அருகாமையில் இருக்கும் ஒரு இடத்தில் இருந்தே கணினி மூலமாக உங்கள் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளில் இருந்து தீர்வுகளைப் பெறுவது போன்றவை வரவேற்கப்படும் செயல்பாடுகளாகும்.
இது போன்ற துறைகளில் அரசின் ஆதரவு மற்றும் வரவு செலவுக் கணக்கிற்கான ஒதுக்கீடுகள் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு மிகவும் வேண்டியதாகும், இருந்தாலும் இத்திட்டங்கள் சரியான முறையில் பரவலாக வழங்கப்பட்டால் மற்றும் விநியோகிக்கப்பட்டால் மட்டுமே அவற்றின் பயன்பாடுகள் குறித்த மக்களுக்கு சென்றடையும் மற்றும் திட்டமும் வெற்றி பெறும். அரசின் மக்கள் நலனுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் தொழில் நுட்பங்களை சார்ந்ததாகவும், அதை செயல்படுத்த பெரிய அளவில் மக்களை ஈடுபட செய்வதாகவும் காணப்படுகின்றன. தேசிக்ரூ நிறுவனம் வழங்கும் சேவைகள் அரசின் பின்-பக்க தேவைகளுக்கு ஆதாரமாகவும், வளையத்தக்க விதத்தில் அவற்றை செயல்படுத்தவும் இயலும், பணியாளர்கள் பரவலாக பல இடங்களில் இருந்து கொண்டு சேவைகளை வழங்கலாம் மேலும் அவைகள் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகளை மையமாக விளங்கும் ஓர் அலுவலகத்தில் இருந்து சரியான முறயில் கண்காணித்து செயல்படுத்தலாம்.
நாங்கள் இதுவரை வெற்றிகரமாக செயல்படுத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு திட்டங்களை ஆதாரமாகக் கொண்டு, மேலும் எங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து, அதனுடன் எங்களுக்கு நன்றாக பரிசயமான இந்தியாவின் இடப்பகுதிகளைப் பற்றிய அறிவாற்றல், ஆகியவற்றின் உதவியைக் கொண்டு, எங்களால், அரசு நிறுவனங்களுக்கு தேவையான பின்-நுனி அலுவலக சேவைகளை தரமான முறையில், குறைந்த முதலீட்டில் வழங்க முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.
மின்னாளுகைக்கான எங்கள் தொழில் நுட்பத்தை ஆதாரமாகக் கொண்ட செயல்பாடுகள் பின்வருமாறு காணலாம்
எண்முறைப்படுத்தல்
எண்முறைப்படுத்தல் வழிமுறைகளில் தேசிக்ரூவினர் தம் திறமையை நன்கு வளர்த்துள்ளனர், அதனால் மின்னணுவியல் ஆவணங்களை முறைப்படி தொகுத்து, சீர்படுத்தி வடிவூட்டுதல், வரிசைப்படுத்தல், மற்றும் ஒழுங்குபடுத்தி அவற்றை எளிதாக தேடும் வகையிலான தகவல் சொத்துக்களாக மாற்றவும், பாதுகாக்கவும் இயலும். எங்கள் குழுவினர் அதிக அளவிலான தரவுகளை குறைந்த நேரத்தில் எண்முறைப்படுத்தி அவற்றை நிர்வாகிக்கும் திறமையை வளர்த்த அனுபவம் கொண்டவர்களாகும்.
வழக்கு ஆய்வினைக் காணவும்மொழிபெயர்ப்பு
ஆங்கிலத்தில் இருந்து மற்ற மொழிகளிலோ, அல்லது பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திலோ, மொழி பெயர்த்து வழங்குதல் எங்கள் சிறப்பான ஒரு அம்சமாகும். அவை புத்தகங்கள் சார்ந்ததாகவோ, ஆய்வறிக்கைகள், கேள்விக்கணைகள், அறிக்கைகள், சட்ட வரைவுகள், அல்லது ஒலிக்கேற்ப வடிவமைத்ததாக இருந்தாலும், நீங்கள் எங்களுக்கு எந்த ஆதாரத்தில் இருந்து அளித்தாலும், அவற்றை உங்கள் தேவைக்கு ஏற்றபடி, மொழிபெயர்த்து அளிப்போம். மிகவும் திறமை வாய்ந்த எங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் குழு, உங்கள் தேவைக்கேற்ப, நீங்கள் வழகிய ஆவணங்களை மொழிபெயர்த்து வழங்கும் திறமை கொண்டவர்களாகும்
வழக்கு ஆய்வினைக் காணவும்ஒலிப்புக்கேற்ப வரைதல்
நீங்கள் பதிவு செய்த ஒரு விரிவுரையினை எழுத்து வடிவில் பார்க்க ஆசையாக உள்ளதா? நீங்கள் பதிவு செய்த ஒரு பேட்டி அல்லது பதிவு செய்த உரையாடலை எழுத்துவடிவத்தில் பார்க்க ஆசையாக உள்ளதா ? கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் பதிவு செய்த எந்த ஆவணமாக இருந்தாலும், அதனை மிகவும் கவனமாக ஒலிப்புக்கேற்ப வரைதல் அல்லது துல்லியமாக மொழிபெயர்த்து அளிக்க இயலும், மேலும் நாங்கள் ஒலிப்புக்கேற்ப வரைதல் புரிதலில் மிகவும் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுள்ளோம்.
வழக்கு ஆய்வினைக் காணவும்செயல் முறை நிர்வாகம்
எங்களிடம் கடுமையான நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மற்றும் அதிகமான வகையில் மனித ஆற்றலைப் பயன் படுத்தும் பெரிய பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தும் செயல் திறமை உள்ளது. எங்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த திட்ட மேலாளர்கள் மிகவும் வெற்றிகரமாக தேசிக்ரூ நிறுவனத்திற்காக 26 க்கும் மேலான செயல்திட்டங்களை செயல்லாக்கி வெற்றி கண்டுள்ளனர், அவற்றில் ராஜஸ்தான் அரசின் பாமாஷா திட்டமும் அடங்கும்.
வழக்கு ஆய்வினைக் காணவும்

