Services What do we do

The Adobe Creative Suite 3 Video Workshop offers over 200 training videos covering a wide range of subjects for print, web, and video professionals.

இணையதளம் மற்றும் நடமாடும் கைப்பேசி

மதிப்பீடு கூட்டிய சந்தைப் பொருட்களுக்கு பிணையம் (வலைத்தளம்) புதிய சந்தையாகும். இந்த ஊடகம் நடைமுறையில் உள்ளதாகவும், மேலும் அதிகமான பற்று கொண்டதாகும். அதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் உடனுக்குடன் தொடர்புகொள்ளலாம் மேலும் அன்றைக்கான சந்தை நிலவரங்கள் சார்ந்து நேரடியாக கலந்துரையாடி முடிவுகள் எடுக்கலாம். தரவுகள் இங்கு ராஜ மரியாதைக்கு உட்பட்டால், அதனை வெளியிடுபவர் அதன் தலைவர்கள் ஆகும்.

இந்தியாவைப் பொறுத்த வரை, இணையதளம் மற்றும் நகரும் தன்மைகொண்ட மொபைல் தொலைபேசிகள் வர வர முக்கிய பங்குகள் வகித்து, செய்திகள் வழங்குவது, ஊடகங்களில் செயல்படுவது, பொழுது போக்கு மற்றும் மின் வழி பயிற்ச்சிகள் பெறுதல் போன்ற பிரிவுகள் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. இந்த மாறுதலுக்கு அடிப்படைக் காரணம் இவற்றுள் நல்ல சம்பந்தம் அல்லது பொருத்தம் இருப்பதே. வலைத்தள சேவைகள் மற்றும் உள்ளடக்கம் போன்றவை இந்திய மொழிகளிலேயே கிடைக்கப் பெறுவதால், அவை யாவும் பயனர்களுக்கு உகந்தவையாகவே மாறிவிடுகின்றன. கூடுதலாக, இந்தியாவில் கிராமங்களிலும் தொலை தொடர்பு மற்றும் இதர பயன்பாடுகளுக்கு, சமூகத்தினர் வலைத்தளத்தை பயன் படுத்துகிறார்கள், மற்றும் பொது மக்களும் கைப்பேசிகளை விரும்பி வாங்குகிறார்கள் மேலும் அவை ஆழமாக கிராமச்சந்தைகளிலும் ஊடுருவியுள்ளதால், மக்கள் இது போன்ற கருவிகளை பயன்படுத்தும் வழிமுறைகளையும் தெரிந்து கொண்டு, அதனால் பயனும் அடைந்து வருகிறார்கள்.

பயனர்களின் வாழ்க்கையில் தரவுகள் மற்றும் உள்ளடக்கம் சார்ந்த விழிப்புணர்வுடன் அவற்றின் முக்கியத்துவத்தையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளதால், தேசிக்ரூ நிறுவனம் வழங்கும் சேவைகள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த தரவுகள் நல்ல முறையில் பரிசீலிக்கப்பட்டு, அதற்குப்பின் ஒழுங்கான முறையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் சிறந்த பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும் இது போன்ற சேவைகள் தரத்துடன், குறைந்த செலவுகளுடன், தகுந்த நேரத்தில், தாமதம் இல்லாமல் வழங்கப்படுவதால் வாடிக்கையாளரும், பயனர்கள் இருவருமே பயன் அடைகிறார்கள். இதன் மூலமாக வாடிக்கையாளர்களும் தமது ஊழியர்களை மேலும் மதிப்பீடு கூடிய பணிகளில் ஈடுபடுத்தவும், அதன் மூலமாக நிறுவனம் மேலும் வளர்ச்சியடையவும் வழி வகுக்கின்றது.

எங்கள் இணையதளம் மற்றும் நடமாடும் கைப்பேசி சேவைகள் மூலமாக தொலைநோக்குடன் கூடிய கீழே கொடுக்கப்பட்ட சேவைகளுக்கு பொருத்தமானதாகும்

இணையதள நெறிமுறைப்படுத்துதல்

நாம் வாழும் இந்த எண்முறை சகாப்தத்தில், உங்கள் நிறுவனத்தின் வலைத்தளம் வெளி உலகத்திற்கு உங்கள் நிறுவனத்தின் முகமாகும். உங்கள் வலைத்தளத்தில் இணைப்பு முறிவுகள், (பதிவு) ஏற்றும் பொழுது பிரச்சினைகள் மற்றும் தவறாக பெயரிடப்பட்ட பகுப்புகள் இருந்தால், உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு ஏளனத்திற்கு ஆளாகிவிடும் மற்றும் அதனால் உங்கள் நிறுவனம் பாதிக்கப்படலாம். உங்கள் உருவம் நல்ல முறையிலும், தொழில் முறை நாணயத்துடனும், மற்றும் திறமையாகவும் இருக்கும் வகையில் செயதியறிவிக்க வேண்டும், அதற்காக தேசிக்ரூ நிறுவனத்தின் எங்கள் குழுவனர் உங்கள் தேவைக்கு ஏற்றவகையில் உங்கள் வலைதளத்தின் ஒவ்வொரு பகுப்பினையும் கூர்ந்து ஆராய்ந்து சோதனைகளை நடத்துவார்கள். நாங்கள் விடியோப்படங்கள், புகைப்படங்கள், படங்கள் போன்ற பொருட்கள் சரியாக வலைத்தளத்தில் ஏற்றுவதை சொதித்துப்பார்ப்போம், பகுப்புகள் சரியான முறையில் பெயரிடப்படுவதை உறுதி செய்வோம், மேலும் இணைப்புகள் தேவைக்கு ஏற்றாற்போல் சரியாகப் பணி புரியும் மேலும் நீங்கள் குறிப்பிட்டபடியே உங்கள் வலைத்தளத்தின் அனைத்து செய்முறைகளும் சரியாக செயல்படும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
வலைத்தளப் பொருட்களை பீடா சோதனைக்கு உட்படுத்துவது

உங்கள் வலைத்தளத்தை சிறப்பாக செயல்படவைப்ப்தோடல்லாமல், எங்கள் சொதனையாளர்களின் குழு, உங்கள் வலைத்தளத்தை செயலாக்குவதற்கு முன்னால், உங்கள் வலைத்தலப்பொருட்கள் பற்றிய உங்களுக்கு மிகவும் தேவையான பின்னூட்டத்தை எங்களால் அளிக்க இயலும். அதனால் உங்களுக்கு தேவையான மிகவும் உயர்ந்த தரம் மற்றும் மிகவும் துல்லியமாக உங்கள் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்த இயலும். உங்கள் வலைத்தளத்தில் எந்தப் பொருட்கள் சரியாக வேலை செய்கின்றன, எவை சரியாக வேலை செய்யவில்லை மற்றும் இந்தியர்களின் கண் நோக்குடன் என்ன குறைபாடு உள்ளது என்பதை தெரிந்துகொண்டு, இந்த விரிவான சந்தையின் தேவைகளை சரியான முறையில் சமாளிக்கும் வழிமுறைகளை உங்களுக்கு எடுத்துக் காட்டுவோம்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
நேரடி அரட்டை உலாவலில் பதில்கள் /விடைகள் அளிப்பது/ பெறுவது

இந்த புதிய தகவல் தொழில் நுட்ப சகாப்தத்தில், தொலைபேசியில் பேசுவதை அல்லது நேரில் காண்பதை விட, எஸ்எம்எஸ் மூலமாகவோ, அல்லது நேரடி அரட்டை உலாவுதல் மூலமாகவோ, தேவைப்பட்ட சேவைகளை பெற விரும்புவது சகஜமாகப் போய் விட்டது. இந்த சூழ்நிலையில், தேசிக்ரூவின் தேர்ச்சி பெற்ற குழு உறுப்பினர்கள் மற்றும் மேலாளர்கள் நேரடியாகவே வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது அரட்டை உலாவுதல் மூலமாகவோ, விடைகளை நேரடியாக அளிக்கலாம்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
உள்ளடக்கத்தை உருவாக்குதல், விரிவு படுத்துதல் மற்றும் மட்டுறுத்தல்

நீங்கள் உங்கள் தேவைகளுக்கான விவரக்கூற்றை எங்களுக்கு அளித்தால், நாங்கள் அதற்கான விளைவளவை உங்களுக்கு விநியோகம் செய்வோம். ஒரு உலக நிலப்படத்தில் புவியல் சார்ந்த தரவுகளை உருவாக்கி அவற்றை பதிவு செய்வதில் இருந்து, விக்கி இடங்களில் பயனாளிகள் உருவாக்கிய உள்ளடக்கங்களின் தரத்தை சோதித்து, அவற்றை மட்டுறுத்தி வழங்குதல், மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டு புதிய உள்ளடக்கங்களை உருவாக்குதல் போன்ற அனைத்தையும், உங்கள் தேவைக்கேற்ப உருவாக்கி, உங்கள் தேவைக்கேற்றபடியே அவற்றை ஒழுங்குபடுத்தி, மேலும் அதன் தரத்தையும் மட்டுறுத்தி வழங்க எங்கள் குழுவினரால் இயலும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
இணைய பொருட்களை உள்ளூர்மைய மாக்கல்

இணையதளத்தில் அல்லது வலைத்தளத்தில் இணையதளப் பொருட்கள் பெருகி வருவதுடன், அவை மக்கள் விரும்புவதாகவும் அமைந்துள்ளன. ஆனால் அவை உள்ளூர் மக்களிடம் சென்றடைவதற்கு, அவர்களுடைய விருப்பத் தெரிவுகள் மற்றும் தாக்கங்களை நன்கு புரிந்து கொண்டு சந்தை படுத்தல் வேண்டும். சில நேரங்களில் இத்தகைய பொருட்களுக்கு குறிப்பிட்ட சந்தையைப் பொறுத்து உள்ளூர் பகுதி பாதிப்பு மற்றும் மொழிகளின் ஆதாரங்கள் தேவைப்படலாம். இது போன்ற நிலைமைகளில் தேசிக்ரூவின் அனுபவம் வாய்ந்த குழுவினர் உங்கள் உற்பத்திப்பொருளை இந்திய மற்றும் உள்ளூர் சந்தை நிலவரப்படி பல்வேறு மொழிகளில் பயனரின் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து சந்தைப் படுத்த உதவலாம்.

 

வாடிக்கையாளர் வார்த்தைகள்

"செயல்படுத்தும் வேகம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் தேவைகளைப் புரிந்து கொள்வதும், பின்னர் அதற்கேற்ப அணுகுமுறைகளை அபிவிருத்தி செய்வதும் மிகவும் திருப்திகரமாக உள்ளது.""

"தேசிக்ரூ உண்மையிலேயே எங்களுக்கு மிகச் சிறப்பாக உதவி இருக்கிறார்கள். மேலும் 2008-ஆம் ஆண்டு ஜூன் 26-27 தேதிகளில் அவர்கள் செய்த அருமையான பணியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.... "

"தேசிக்ரூவின் திரு உண்மையிலேயே எங்களைப் புரிந்து கொண்டு, மிகவும் ஒத்துழைப்பு வழங்கினார். அவர்களின் தரம் மற்றும் செயல்முறை பயிற்சி குறித்து கூறுவதானால், அவர்களுடன் எங்களுக்கு எந்த சிக்கலும் ஏற்பட்டதே இல்லை. "

"தொழிலை விரிவாக்குவதில், நாங்கள் நிச்சயமாக அவர்களுடன் இணைந்து மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். "

" உங்களைப் (தேசிக்ரூவைப்) போன்ற சிறந்த தொழில்முறை அமைப்புடன் இணைந்திருப்பதில், இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. "

"உங்களது குழுவின் (தேசிக்ரூ) ஒவ்வொரு உறுப்பினரது அர்ப்பணிப்பு உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அவர்களது உண்மையான உழைப்பு மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். "

பரிசோதனைரீதியாக, எங்கள் திட்டங்களில் ஒன்றில் செயல்பட நாங்கள் தேசிக்ரூவை நியமித்தோம். தொடக்கத்தில் பரிசோதனையாக கருதப்பட்ட ஒன்று, பின்னர் சிறந்த பலன்களுடன் வெற்றிகரமான ஒன்றாக மாறியது.... "

தேசிக்ரூ அதன் பணிமுறையின் மூலமாக, ஆழமான அர்பணிப்பையும், ஒழுங்கமைப்பையும் எடுத்துக்காட்டி உள்ளது. எந்தளவிற்கு என்றால், எங்கள் வெற்றியில் தேசிக்ரூவும் ஓர் உள்ளார்ந்த பாகமாக மாறிவிட்டது. "

ஒவ்வொரு புதிய காலாண்டிலும், அவர்களின் சேவைத்தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் எதிர்கால திட்டங்களில் தேசிக்ரூ நிச்சயம் இடம் பெற்றிருக்கும். "

தேசிக்ரூவின் அனுகூலங்கள்

தேசிக்ரூவும், அதன் குழு உறுப்பினர்களும்

தொழிலுக்கான எங்களின் மதிப்பார்ந்த அணுகுமுறை, எங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கும் (வாடிக்கையாளர்கள், மக்கள், சமூகம் மற்றும் தொழில்) முழுமையான இலாபங்களை அளிப்பதுடன், தேவையான சமூக மாற்றங்களையும் உருவாக்கி அளிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us