Services What do we do

The Adobe Creative Suite 3 Video Workshop offers over 200 training videos covering a wide range of subjects for print, web, and video professionals.

சந்தை ஆய்வு

உலகமயமான சந்தையின் செயல்பாடுகளால் மிகவும் அதிகமான மற்றும் கடுமையான போட்டியுடன் கூடிய ஒரு புதிய சந்தையின் சகாப்தம் உருவாகியுள்ளது. சந்தை நிலவரத்திற்கு ஏற்றபடி உயர்ந்த மற்றும் கீழ் மட்ட அளவுகளில் செயல்முறைகள் அமைக்க வேண்டியது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். இந்த வழிமுறையில் பயனர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள மிகவும் கவனமாக சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் மேலும் விழிப்புணர்ச்சியுடன் பொருட்களை தனிப்படுத்தி, மதிப்புக்கூடிய சேவைகள் அல்லது பொருட்கள் வழங்கவேண்டும் புதிய மற்றும் புத்தமைத்த முன்மாதிரிகள் கொண்ட கருத்துப்படிவங்களை வழங்கவேண்டும். வெற்றிகரமான சந்தைப்படுத்தல் ஆராய்ச்சிக்குப் பிறகு, அதற்குத் தகுந்த தகவல் தரவுகள் சேகரித்து நடைமுறையில் திட்டங்களை செயலாக்க வேண்டும். இதற்காக தெளிவான மற்றும் துல்லியமான தரவுகள் தேவைப்படும், அவை சரியான வகையில் செய்முறைப் படுத்த வேண்டும் மேலும் வணிக ரீதியில் அவற்றை ஆய்ந்து பார்க்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

இந்த இடத்தில் தேசிக்ரூவினரான நாங்கள் தனித்து நிற்கிறோம், நாங்கள் தரவுகளை சேகரிப்பதிலும், செய்முறைப்படுத்துதலிலும், மற்றும் தரவுகளை காட்சிக்கு வைப்பதிலும், ஆகிய ஒவ்வொரு கட்டத்திலும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒவ்வொரு சக நிறுவனங்களுடன் பங்கேற்கிறோம் எங்கள் பரவலாக்கிய நிருவாக முறை மற்றும் உள்ளூர் வகை சந்தை முன்வடிவம் எங்களுக்கு நாட்டின் ஒவ்வொரு பாகத்திலும் ஆழமாக சென்று செயல்படும் திறமையை வளர்த்துள்ளது. உள்ளூர் குழுவினர் எங்களுக்கு இது போன்ற வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது மேலும் அதன் காரணமாக புவிமையம் கொண்ட குழுவனரை சந்தித்து பேசவும், வழிமுறைப் படுத்திய ஆய்வுகளை தகுந்த மக்களுடன் மேற்கொள்ளவும், இயலுகிறது. எங்களால் கிராமப்புறங்களில் நடந்து சென்று, அங்குள்ள மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களுடைய கருத்துக்களை அறிந்து வகைப்படுத்தி, ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடியும் மேலும் இது போன்ற முதன்மை தரவுகளை எளிதில் செல்ல முடியாத நிலப்பரப்புகளில் இருந்து பெறமுடியும். எங்களால் பொதுவாக உள்ளூர் மொழிகள் மற்றும் கிளை மொழிகளில் பெற்ற தரவுகளை சவாலாக ஏற்று, முக்கியமாக மொழிபெயர்த்து சரியான வழிமுறையில் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு தொகுத்து வழங்க முடியும்.

தரவுகள் ஒரு முறை சேகரிக்கப்பட்டால், உடனுக்குடன் தேசிக்ரூவின் பின் அலுவலக ஊழியர்கள், மொழிபெயர்ப்புகள், தரவுப் பதிவிடல் செய்வது, மற்றும் உயர்நிலை ஆராய்ச்சிகளை மேற்கொள்வது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். இதனால் ஆராய்ச்சியாளர்களுக்கு வேலைப்பளு குறைவதால் அவர்கள் மிகவும் ஈடுபாடுடன் தரவுகளை புவிமையத்துடன் ஆராய்ந்து பார்ப்பார்கள் மற்றும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தரவுகளை நன்றாக அலசிப்பார்த்து, அவர்களுடைய கருத்துக்களை காட்ச்சிக்கு வைப்பார்கள்.

எங்கள் சேவைகள் வழங்குவதற்கான முன்வடிவம் ஒரே இடத்தை சார்ந்ததாகவும், மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சந்தைபபடுத்துதலுக்காக ஏற்றதும் ஆகும்

எண்முறைப்படுத்தல்

எண்முறைப்படுத்தல் வழிமுறைகளில் தேசிக்ரூவினர் தம் திறமையை நன்கு வளர்த்துள்ளனர், அதனால் மின்னணுவியல் ஆவணங்களை முறைப்படி தொகுத்து, சீர்படுத்தி வடிவூட்டுதல், வரிசைப்படுத்தல், மற்றும் ஒழுங்குபடுத்தி அவற்றை எளிதாக தேடும் வகையிலான தகவல் சொத்துக்களாக மாற்றவும், பாதுகாக்கவும் இயலும். எங்கள் குழுவினர் அதிக அளவிலான தரவுகளை குறைந்த நேரத்தில் எண்முறைப்படுத்தி அவற்றை நிர்வாகிக்கும் திறமையை வளர்த்த அனுபவம் கொண்டவர்களாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
மொழிபெயர்ப்பு

ஆங்கிலத்தில் இருந்து மற்ற மொழிகளிலோ, அல்லது பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திலோ, மொழி பெயர்த்து வருதல் எங்கள் சிறப்பான ஒரு அம்சமாகும். அவை புத்தகங்கள் சார்ந்ததாகவோ, ஆய்வறிக்கைகள், கேள்விக்கணைகள், அறிக்கைகள், சட்ட வரைவுகள், அல்லது ஒலிக்கேற்ப வடிவமைத்ததாக இருந்தாலும், நீங்கள் எங்களுக்கு எந்த ஆதாரத்தில் இருந்து அளித்தாலும், அவற்றை உங்கள் தேவைக்கு ஏற்றபடி, மொழிபெயர்த்து அளிப்போம். மிகவும் திறமை வாய்ந்த எங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் குழு, உங்கள் தேவைக்கேற்ப, நீங்கள் வழகிய ஆவணங்களை மொழிபெயர்த்து வழங்கும் திறமை கொண்டவர்களாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
ஒலிப்புக்கேற்ப வரைதல்

நீங்கள் பதிவு செய்த ஒரு விரிவுரையினை எழுத்து வடிவில் பார்க்க ஆசையாக உள்ளதா? நீங்கள் பதிவு செய்த ஒரு பேட்டி அல்லது பதிவு செய்த உரையாடலை எழுத்துவடிவத்தில் பார்க்க ஆசையாக உள்ளதா ? கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் பதிவு செய்த எந்த ஆவணமாக இருந்தாலும், அதனை மிகவும் கவனமாக ஒலிப்புக்கேற்ப வரைதல் அல்லது துல்லியமாக மொழிபெயர்த்து அளிக்க இயலும், மேலும் நாங்கள் ஒலிப்புக்கேற்ப வரைதல் புரிவதில் மிகவும் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுள்ளோம்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
உயர்நிலை ஆராய்ச்சி

எங்கள் உயர்நிலை ஆராய்ச்சியாளர்களின் குழுவினரால், உங்கள் ஆராய்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப ஆழ்ந்த ஆன்லைன் ஆராய்ச்சிகளையும், தேவைப்பட்டால் முதன்மை ஆவணங்களையும், அளித்து உதவமுடியும். இந்தப் பணிகளைப் பொறுத்தவரை, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வகையுண்டு, நாங்கள் இதற்கு முன் ஜிஐஎஸ் வரைபடம் வரைதல் போன்ற மற்றும் கைப்பேசி வாடிக்கையாளர்களின் பல தரப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் வழங்கி அந்நிறுவனத்திற்கு மதிப்பு கூடிய சேவைகளை வழங்கியுள்ளோம். கூடுதலாக, எங்கள் குழுவினருக்கு உள்ளூர் நிலைமையைப் பற்றி நன்றாகத் தெரியும், மற்றும் பல்வேறு மொழிகளில் திறமையுள்ளவர்கள் ஆவார்கள், இது போன்ற திறமைகள் இன்றைய சூழ்நிலைகளில் கிராமப்புற இந்தியாவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இன்றியமையாததாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

 

வாடிக்கையாளர் வார்த்தைகள்

"செயல்படுத்தும் வேகம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் தேவைகளைப் புரிந்து கொள்வதும், பின்னர் அதற்கேற்ப அணுகுமுறைகளை அபிவிருத்தி செய்வதும் மிகவும் திருப்திகரமாக உள்ளது.""

"தேசிக்ரூ உண்மையிலேயே எங்களுக்கு மிகச் சிறப்பாக உதவி இருக்கிறார்கள். மேலும் 2008-ஆம் ஆண்டு ஜூன் 26-27 தேதிகளில் அவர்கள் செய்த அருமையான பணியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.... "

"தேசிக்ரூவின் திரு உண்மையிலேயே எங்களைப் புரிந்து கொண்டு, மிகவும் ஒத்துழைப்பு வழங்கினார். அவர்களின் தரம் மற்றும் செயல்முறை பயிற்சி குறித்து கூறுவதானால், அவர்களுடன் எங்களுக்கு எந்த சிக்கலும் ஏற்பட்டதே இல்லை. "

"தொழிலை விரிவாக்குவதில், நாங்கள் நிச்சயமாக அவர்களுடன் இணைந்து மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். "

" உங்களைப் (தேசிக்ரூவைப்) போன்ற சிறந்த தொழில்முறை அமைப்புடன் இணைந்திருப்பதில், இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. "

"உங்களது குழுவின் (தேசிக்ரூ) ஒவ்வொரு உறுப்பினரது அர்ப்பணிப்பு உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அவர்களது உண்மையான உழைப்பு மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். "

பரிசோதனைரீதியாக, எங்கள் திட்டங்களில் ஒன்றில் செயல்பட நாங்கள் தேசிக்ரூவை நியமித்தோம். தொடக்கத்தில் பரிசோதனையாக கருதப்பட்ட ஒன்று, பின்னர் சிறந்த பலன்களுடன் வெற்றிகரமான ஒன்றாக மாறியது.... "

தேசிக்ரூ அதன் பணிமுறையின் மூலமாக, ஆழமான அர்பணிப்பையும், ஒழுங்கமைப்பையும் எடுத்துக்காட்டி உள்ளது. எந்தளவிற்கு என்றால், எங்கள் வெற்றியில் தேசிக்ரூவும் ஓர் உள்ளார்ந்த பாகமாக மாறிவிட்டது. "

ஒவ்வொரு புதிய காலாண்டிலும், அவர்களின் சேவைத்தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் எதிர்கால திட்டங்களில் தேசிக்ரூ நிச்சயம் இடம் பெற்றிருக்கும். "

தேசிக்ரூவின் அனுகூலங்கள்

தேசிக்ரூவும், அதன் குழு உறுப்பினர்களும்

தொழிலுக்கான எங்களின் மதிப்பார்ந்த அணுகுமுறை, எங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கும் (வாடிக்கையாளர்கள், மக்கள், சமூகம் மற்றும் தொழில்) முழுமையான இலாபங்களை அளிப்பதுடன், தேவையான சமூக மாற்றங்களையும் உருவாக்கி அளிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us