Services What do we do

The Adobe Creative Suite 3 Video Workshop offers over 200 training videos covering a wide range of subjects for print, web, and video professionals.

சமூகத் துறை

அண்மைக்காலங்களில், இலாபத்தை எதிபார்க்காமல் செயல்படும் அரசு சாரா சமூக நிறுவனங்கள் வெறும் கண்துடைப்பு நிறுவனங்களாகவும், தருமம் வழங்கும் அமைப்புகளாகவும் இருப்பதை விட்டு, சிலர் சமூக விழிப்புணர்வுடன் உண்மையான சேவைகள் வழங்குவதில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஓர் உண்மையான நோக்கத்துடன் சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வர முனைந்து வருகின்றனர், குறிப்பாக பெண்கள் விழிப்புணர்வு, கல்வி மற்றும் சம அந்தஸ்து போன்ற சீர்குலைவுகளை திருத்துவதில் மெய்யான ஆர்வம் கொண்டுள்ளனர்.

வணிக ரீதியிலான சூழல்களும் பரவலாக மாற்றத்துடனும் காணப்படுகிறது மற்றும் சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற மனப்பாங்குடன் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். மக்களை சூறையாடும் தன்மைகளை விட்டு, அவர்களை அரவணைக்கும் காலம் வந்து விட்டது. எங்களைப் போன்ற பல நிறுவனங்கள் கூடி வாழ்ந்தால் கோடி செல்வம் நன்மை என்ற வழிமுறையின் பொருளை நன்கு உணர்ந்து, சமுதாயத்தை அரவணைக்கும் மற்றும் ஆதரிக்கும் தன்மையுடன் சேவைகளை வழங்கி வருகிறார்கள்.

இக்காலத்தில் சமூக விழிப்புணர்வு மேலும் வளர்ந்து வருகிறது மட்டும் அல்லாமல், பொறுப்புடமையும் கூடி வருகிறது, அதனால் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவன இணைநது சமூகத்தில் குறிப்பிடும் படியான தாக்க விளைவுகள் உருவாக்க முனைந்து வருகின்றனர்.எங்கள் எண்முறைப்படுத்தல் சேவைகள் மூலமாக நாங்கள் அரசு சாரா நிறுவனங்களுக்கு ஆய்வுகள் மேற்கொள்வதற்கான படிவங்கள் மற்றும் கருத்துருக்களை உள்ளூர் மொழியில் பயன் படும் வகையில் வழங்கி வருகிறோம். கூடுதலாக, தேசிக்ரூ நிறுவனம் பொறுப்புடன் கூடிய சில வல்லுனர்கள் மட்டுமே கொண்ட குழுவினர்களின் திறமை மிக்க செயல்பாடுகளால் வலிமை பெற்று, உயர்ந்த வகையிலான பொறுப்புடன் கூடிய சேவைகளை, குறைந்த உபரிகள் மற்றும் செலவுகளுடன், வழங்கி வருகிறது, இதனால் பலருக்கு ஆதாயம் ஏற்படுகிறது. மேலும் இறுதியாக, எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் கிராமத்தில் வாழும் பல் இளைய சமுதாயத்தை சார்ந்த படித்த இளைஞர்களுக்கு, விளக்கேற்றி வைத்த தெய்வமாகவும் காணப்படுவீர்கள்.

மேம்பட்டுவரும் துறைகளில் நிறுவனங்கள் தெரிவு செய்து வழங்கக்கூடிய சேவைகள்

எண்முறைப்படுத்தல்

எண்முறைப்படுத்தல் வழிமுறைகளில் தேசிக்ரூவினர் தம் திறமையை நன்கு வளர்த்துள்ளனர், அதனால் மின்னணுவியல் ஆவணங்களை முறைப்படி தொகுத்து, சீர்படுத்தி வடிவூட்டுதல், வரிசைப்படுத்தல், மற்றும் ஒழுங்குபடுத்தி அவற்றை எளிதாக தேடும் வகையிலான தகவல் சொத்துக்களாக மாற்றவும், பாதுகாக்கவும் இயலும். எங்கள் குழுவினர் அதிக அளவிலான தரவுகளை குறைந்த நேரத்தில் எண்முறைப்படுத்தி அவற்றை நிர்வாகிக்கும் திறமையை வளர்த்த அனுபவம் கொண்டவர்களாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
மொழிபெயர்ப்பு

ஆங்கிலத்தில் இருந்து மற்ற மொழிகளிலோ, அல்லது பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திலோ, மொழி பெயர்த்து வருதல் எங்கள் சிறப்பான ஒரு அம்சமாகும். அவை புத்தகங்கள் சார்ந்ததாகவோ, ஆய்வறிக்கைகள், கேள்விக்கணைகள், அறிக்கைகள், சட்ட வரைவுகள், அல்லது ஒலிக்கேற்ப வடிவமைத்ததாக இருந்தாலும், நீங்கள் எங்களுக்கு எந்த ஆதாரத்தில் இருந்து அளித்தாலும், அவற்றை உங்கள் தேவைக்கு ஏற்றபடி, மொழிபெயர்த்து அளிப்போம். மிகவும் திறமை வாய்ந்த எங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் குழு, உங்கள் தேவைக்கேற்ப, நீங்கள் வழகிய ஆவணங்களை மொழிபெயர்த்து வழங்கும் திறமை கொண்டவர்களாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
ஒலிப்புக்கேற்ப வரைதல்

நீங்கள் பதிவு செய்த ஒரு விரிவுரையினை எழுத்து வடிவில் பார்க்க ஆசையாக உள்ளதா? நீங்கள் பதிவு செய்த ஒரு பேட்டி அல்லது பதிவு செய்த உரையாடலை எழுத்துவடிவத்தில் பார்க்க ஆசையாக உள்ளதா ? கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் பதிவு செய்த எந்த ஆவணமாக இருந்தாலும், அதனை மிகவும் கவனமாக ஒலிப்புக்கேற்ப வரைதல் அல்லது துல்லியமாக மொழிபெயர்த்து அளிக்க இயலும், மேலும் நாங்கள் ஒலிப்புக்கேற்ப வரைதல் புரிவதில் மிகவும் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுள்ளோம்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
உயர்நிலை ஆராய்ச்சி

எங்கள் உயர்நிலை ஆராய்ச்சியாளர்களின் குழுவினரால், உங்கள் ஆராய்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப ஆழ்ந்த ஆன்லைன் ஆராய்ச்சிகளையும், தேவைப்பட்டால் முதன்மை ஆவணங்களையும், அளித்து உதவமுடியும். இந்தப் பணிகளைப் பொறுத்தவரை, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வகையுண்டு, நாங்கள் இதற்கு முன் ஜிஐஎஸ் வரைபடம் வரைதல் போன்ற மற்றும் கைப்பேசி வாடிக்கையாளர்களின் பல தரப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் வழங்கி அந்நிறுவனத்திற்கு மதிப்பு கூடிய சேவைகளை வழங்கியுள்ளோம். கூடுதலாக, எங்கள் குழுவினருக்கு உள்ளூர் நிலைமையைப் பற்றி நன்றாகத் தெரியும், மற்றும் பல்வேறு மொழிகளில் திறமையுள்ளவர்கள் ஆவார்கள், இது போன்ற திறமைகள் இன்றைய சூழ்நிலைகளில் கிராமப்புற இந்தியாவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இன்றியமையாததாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்
செயல் முறை நிர்வாகம்

எங்களிடம் கடுமையான நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மற்றும் அதிகமான வகையில் மனித ஆற்றலைப் பயன் படுத்தும் பெரிய பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தும் செயல் திறமை உள்ளது. எங்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த திட்ட மேலாளர்கள் மிகவும் வெற்றிகரமாக தேசிக்ரூ நிறுவனத்திற்காக 26 க்கும் மேலான செயல்திட்டங்களை செயல்லாக்கி வெற்றி கண்டுள்ளனர், அவற்றில் ராஜஸ்தான் அரசின் பாமாஷா திட்டமும் அடங்கும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

 

வாடிக்கையாளர் வார்த்தைகள்

"செயல்படுத்தும் வேகம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் தேவைகளைப் புரிந்து கொள்வதும், பின்னர் அதற்கேற்ப அணுகுமுறைகளை அபிவிருத்தி செய்வதும் மிகவும் திருப்திகரமாக உள்ளது.""

"தேசிக்ரூ உண்மையிலேயே எங்களுக்கு மிகச் சிறப்பாக உதவி இருக்கிறார்கள். மேலும் 2008-ஆம் ஆண்டு ஜூன் 26-27 தேதிகளில் அவர்கள் செய்த அருமையான பணியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.... "

"தேசிக்ரூவின் திரு உண்மையிலேயே எங்களைப் புரிந்து கொண்டு, மிகவும் ஒத்துழைப்பு வழங்கினார். அவர்களின் தரம் மற்றும் செயல்முறை பயிற்சி குறித்து கூறுவதானால், அவர்களுடன் எங்களுக்கு எந்த சிக்கலும் ஏற்பட்டதே இல்லை. "

"தொழிலை விரிவாக்குவதில், நாங்கள் நிச்சயமாக அவர்களுடன் இணைந்து மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். "

" உங்களைப் (தேசிக்ரூவைப்) போன்ற சிறந்த தொழில்முறை அமைப்புடன் இணைந்திருப்பதில், இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. "

"உங்களது குழுவின் (தேசிக்ரூ) ஒவ்வொரு உறுப்பினரது அர்ப்பணிப்பு உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அவர்களது உண்மையான உழைப்பு மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். "

பரிசோதனைரீதியாக, எங்கள் திட்டங்களில் ஒன்றில் செயல்பட நாங்கள் தேசிக்ரூவை நியமித்தோம். தொடக்கத்தில் பரிசோதனையாக கருதப்பட்ட ஒன்று, பின்னர் சிறந்த பலன்களுடன் வெற்றிகரமான ஒன்றாக மாறியது.... "

தேசிக்ரூ அதன் பணிமுறையின் மூலமாக, ஆழமான அர்பணிப்பையும், ஒழுங்கமைப்பையும் எடுத்துக்காட்டி உள்ளது. எந்தளவிற்கு என்றால், எங்கள் வெற்றியில் தேசிக்ரூவும் ஓர் உள்ளார்ந்த பாகமாக மாறிவிட்டது. "

ஒவ்வொரு புதிய காலாண்டிலும், அவர்களின் சேவைத்தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் எதிர்கால திட்டங்களில் தேசிக்ரூ நிச்சயம் இடம் பெற்றிருக்கும். "

தேசிக்ரூவின் அனுகூலங்கள்

தேசிக்ரூவும், அதன் குழு உறுப்பினர்களும்

தொழிலுக்கான எங்களின் மதிப்பார்ந்த அணுகுமுறை, எங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கும் (வாடிக்கையாளர்கள், மக்கள், சமூகம் மற்றும் தொழில்) முழுமையான இலாபங்களை அளிப்பதுடன், தேவையான சமூக மாற்றங்களையும் உருவாக்கி அளிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us