Services What do we do

The Adobe Creative Suite 3 Video Workshop offers over 200 training videos covering a wide range of subjects for print, web, and video professionals.

எங்கள் சேவைகள்

தொழில்வழங்குனரிடையே மதிப்பை உருவாக்குதல்

எந்தளவிற்கு சிக்கலான வேலை என்றில்லாமல், பணியாளர்களைச் சார்ந்த அனைத்து வேலைகளையும், வெற்றிகரமாகவும், சுலபமாகவும் எங்களின் குறைந்த செலவிலான சிறிய சேவை மையங்களுக்கு மாற்ற முடியும் என்று தேசிக்ரூ நம்புகிறது

தேசிக்ரூவில் இருக்கும் எங்களின் தொழில் ஒப்பந்தசேவை முறை, குறைந்த செலவில், சிறந்த செயல்பாட்டு திறனுடன், புதிய அணுகுமுறையில் அதிகபட்ச தொழில் மதிப்புடன் சேவைகளை வழங்கும். இவை அனைத்துமே எங்களின் கிராமப்புற சேவை அளிப்பு திட்டத்தின் மூலம் சாத்தியமாகிறது. இந்த வடிவம், காப்பீட்டுத்துறை, சந்தை ஆராய்ச்சி, இணையம் & செல்பேசி சேவைகள், மின்-அரசாக்கம், மற்றும் சமூகம்சார் சேவைகள் ஆகிய பல்வேறு துறைகளில் உலகத்தரம் வாய்ந்த சேவைகளை அளிக்க மக்களையும், செயல்முறைகளையும், தொழில்நுட்பத்தையும் தாங்கிப் பிடிக்கிறது.

தேசிக்ரூ நிறுவனத்தில் நாங்கள் வழங்கும் சேவைகள்

உள்ளடக்கத்தை உருவாக்குதல், விரிவு படுத்துதல் மற்றும் மட்டுறுத்தல்

நீங்கள் உங்கள் தேவைகளுக்கான விவரக்கூற்றை எங்களுக்கு அளித்தால், நாங்கள் அதற்கான விளைவளவை உங்களுக்கு விநியோகம் செய்வோம். ஒரு உலக நிலப்படத்தில் புவியல் சார்ந்த தரவுகளை உருவாக்கி அவற்றை பதிவு செய்வதில் இருந்து, விக்கி இடங்களில் பயனாளிகள் உருவாக்கிய உள்ளடக்கங்களின் தரத்தை சோதித்து, அவற்றை மட்டுறுத்தி வழங்குதல், மற்றும் ஆய்வுகள் மேற்கொண்டு புதிய உள்ளடக்கங்களை உருவாக்குதல் போன்ற அனைத்தையும், உங்கள் தேவைக்கேற்ப உருவாக்கி, உங்கள் தேவைக்கேற்றபடியே அவற்றை ஒழுங்குபடுத்தி, மேலும் அதன் தரத்தையும் மட்டுறுத்தி வழங்க எங்கள் குழுவினரால் இயலும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

எண்முறைப்படுத்தல் - வரியோட்டம் மற்றும் தரவுப் பதிவிடல்

எண்முறைப்படுத்தல் வழிமுறைகளில் தேசிக்ரூவினர் தம் திறமையை நன்கு வளர்த்துள்ளனர், அதனால் மின்னணுவியல்ஆவணங்களை தொகுத்து, சீர்படுத்தி வடிவூட்டுதல், வரிசைப்படுத்தல், மற்றும் ஒழுங்குபடுத்தி அவற்றை எளிதாக தேடும் வகையிலான தகவல் சொத்துக்களாக பாதுகாக்க இயலும். எங்கள் குழுவினர் அதிக அளவிலான தரவுகளை குறைந்த நேரத்தில் எண்முறைப்படுத்தி அவற்றை நிர்வாகிக்கும் திறமையை வளர்த்த அனுபவம் கொண்டவர்களாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

நேரடி அரட்டை உலாவலில் பதில்கள் /விடைகள் அளிப்பது/ பெறுவது

இந்த புதிய தகவல் தொழில் நுட்ப சகாப்தத்தில், தொலைபேசியில் பேசுவதை அல்லது நேரில் காண்பதை விட, எஸ் எம் எஸ் மூலமாகவோ, அல்லது நேரடி அரட்டை உலாவுதல் மூலமாகவோ, தேவைப்பட்ட சேவைகளை பெற விரும்புவது சகஜமாகப் போய் விட்டது. இந்த சூழ்நிலையில், தேசிக்ரூவின் தேர்ச்சி பெற்ற குழு உறுப்பினர்கள் மற்றும் மேலாளர்கள் நேரடியாகவே வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு எஸ் எம் எஸ் மூலமாகவோ அல்லது அரட்டை உலாவுதல் மூலமாகவோ, விடைகளை நேரடியாக அளிக்கலாம்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

அஞ்சல் அறை செயல்பாடுகள்

தமது வாடிக்கையாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதற்காக, பல நிறுவனங்கள் தபால் மற்றும் தனியார் விரைவு அஞ்சல் சேவைகளை சார்ந்து இருக்கின்றன. இதற்கு தகுந்தாற்போல் தேசிக்ரூவின் அஞ்சல் அறை நிர்வாக செயல்பாடுகள் உள்நோக்கி வரும் அஞ்சல் அறை மற்றும் வெளியே செல்லும் அஞ்சல் அறைகளை நிறுவ உதவுகின்றன. உள்நோக்கி வரும் அஞ்சல் அறையில் அஞ்சல்களைப் பெற்று, திறந்த பின் அவை பிரிக்கப் படுகின்றன. வெளி நோக்கி செல்லும் அஞ்சல் அறையில் ஆவணங்கள் அச்சிட்டு பிறகு அனுப்பப் படுகின்றன.

புதிய வணிகம் தொடங்குதல்

ஒரு காப்புறுதி நிறுவனத்தின் விண்ணப்ப படிவம் மற்றும் அதனுடன் இணைப்புகள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து முறையாக இருப்பதை சரி பார்ப்பதில் இருந்து, புதிய கருத்துருக்களை தரவுப் பதிவிடல் வரையிலான அனைத்து முறைமைகளிலும் ஒரு தளப்பக்கத்தின் கருவி மூலமாக சோதித்துப் பார்க்கும் வரையிலான அணைத்து செய்முறைகளிலும் தேர்ச்சி பெற்று தேசிக்ரூவின் குழுவினர் இரு முறைமைகளிலும் செய்முறைகளை செயல்படுத்தும் திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளனர். மிகவும் முக்கியமாக இது போன்ற வணிகங்களில் சந்தைப்படுத்தும் தேவைகள் மாறிக்கொண்டே இருப்பதன் விளைவுகளையும் நன்கு புரிந்து கொண்டிருப்பதால், இக்குழுவினர் இது போன்ற சேவைகளை தேவைக்கேற்ப வழங்க தயாராக உள்ளனர். மேலும் நாங்கள் கடந்த 2.5 வருடங்களாக சேகரித்து வைத்துள்ள தரவுகளில் இருந்து, இது போன்ற மாறிக்கொண்டே இருக்கும் தேவைகள் கொண்ட ஒரு அமைப்பை நிருவாகம் செய்ய, தேசிக்ரூவினரின் கிராமத்தை சார்ந்த விநியோக முன்வடிவம் மேலும் விலை பயன்திறன் கொண்டதாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

திட்டப்பணி நிருவாகம்

எங்களிடம் கடுமையான நேரக்கட்டுப்பாட்டுடன் கூடிய மற்றும் அதிகமான வகையில் மனித ஆற்றலைப் பயன் படுத்தும் பெரிய பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தும் செயல் திறமை உள்ளது. எங்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த திட்ட மேலாளர்கள் மிகவும் வெற்றிகரமாக தேசிக்ரூ நிறுவனத்திற்காக 26 க்கும் மேலான செயல்திட்டங்களை செயல்லாக்கி வெற்றி கண்டுள்ளனர், அவற்றில் ராஜஸ்தான் அரசின் பாமாஷா திட்டமும் அடங்கும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

உயர்நிலை ஆராய்ச்சி

எங்கள் உயர்நிலை ஆராய்ச்சியாளர்களின் குழுவினரால், உங்கள் ஆராய்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப ஆழ்ந்த ஆன்லைன் ஆராய்ச்சிகளையும், தேவைப்பட்டால் முதன்மை ஆவணங்களையும், அளித்து உதவமுடியும். இந்தப் பணிகளைப் பொறுத்தவரை, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வகையுண்டு, நாங்கள் இதற்கு முன் ஜிஐஎஸ் வரைபடம் வரைதல் போன்ற மற்றும் கைப்பேசி வாடிக்கையாளர்களின் பல தரப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் வழங்கி அந்நிறுவனத்திற்கு மதிப்பு கூடிய சேவைகளை வழங்கியுள்ளோம். கூடுதலாக, எங்கள் குழுவினருக்கு உள்ளூர் நிலைமையைப் பற்றி நன்றாகத் தெரியும், மற்றும் பல்வேறு மொழிகளில் திறமையுள்ளவர்கள் ஆவார்கள், இது போன்ற திறமைகள் இன்றைய சூழ்நிலைகளில் கிராமப்புற இந்தியாவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இன்றியமையாததாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

ஒலிப்புக்கேற்ப வரைதல்

நீங்கள் பதிவு செய்த ஒரு விரிவுரையினை எழுத்து வடிவில் பார்க்க ஆசையாக உள்ளதா? நீங்கள் பதிவு செய்த ஒரு பேட்டி அல்லது பதிவு செய்த உரையாடலை எழுத்துவடிவத்தில் பார்க்க ஆசையாக உள்ளதா ? கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் பதிவு செய்த எந்த ஆவணமாக இருந்தாலும், அதனை மிகவும் கவனமாக ஒலிப்புக்கேற்ப வரைதல் அல்லது துல்லியமாக மொழிபெயர்த்து அளிக்க இயலும், மேலும் நாங்கள் ஒலிப்புக்கேற்ப வரைதல் புரிவதில் மிகவும் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுள்ளோம்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

மொழிபெயர்ப்பு

ஆங்கிலத்தில் இருந்து மற்ற மொழிகளிலோ, அல்லது பிற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திலோ, மொழி பெயர்த்து வருதல் எங்கள் சிறப்பான ஒரு அம்சமாகும். அவை புத்தகங்கள் சார்ந்ததாகவோ, ஆய்வறிக்கைகள், கேள்விக்கணைகள், அறிக்கைகள், சட்ட வரைவுகள், அல்லது ஒலிக்கேற்ப வடிவமைத்ததாக இருந்தாலும், நீங்கள் எங்களுக்கு எந்த ஆதாரத்தில் இருந்து அளித்தாலும், அவற்றை உங்கள் தேவைக்கு ஏற்றபடி, மொழிபெயர்த்து அளிப்போம். மிகவும் திறமை வாய்ந்த எங்கள் மொழிபெயர்ப்பாளர்களின் குழு, உங்கள் தேவைக்கேற்ப, நீங்கள் வழகிய ஆவணங்களை குறித்த நேரத்தில் மொழிபெயர்த்து வழங்கும் திறமை கொண்டவர்களாகும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

வலைத்தளப் பொருட்களை பீடா சோதனைக்கு உட்படுத்துவது

உங்கள் வலைத்தளத்தை சிறப்பாக செயல்பட வைப்ப்தோடல்லாமல், எங்கள் சொதனையாளர்களின் குழு, உங்கள் வலைத்தளத்தை செயலாக்குவதற்கு முன்னால், உங்கள் வலைத்தலப்பொருட்கள் பற்றிய உங்களுக்கு மிகவும் தேவையான பின்னூட்டத்தை எங்களால் அளிக்க இயலும், அதனால் உங்களுக்கு தேவையான மிகவும் உயர்ந்த தரம் மற்றும் மிகவும் துல்லியமாகவும் உங்கள் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்த இயலும். உங்கள் வலைத்தளத்தில் எந்தப் பொருட்கள் சரியாக வேலை செய்கின்றன, எவை சரியாக வேலை செய்யவில்லை மற்றும் இந்தியர்களின் கண்நோக்குடன் என்ன குறைபாடு உள்ளது என்பதை தெரிந்துகொண்டு, இந்த விரிவான சந்தையின் தேவைகளை சரியான முறையில் சமாளிக்கும் வழிமுறைகளை உங்களுக்கு எடுத்துக் காட்டுவோம்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

இணைய பொருட்களை உள்ளூர்மையமாக்கல்

இணையதளத்தில் இணையதளப் பொருட்கள் பெருகி வருவதுடன், அவை மக்கள் விரும்புவதாகவும் அமைந்துள்ளன. ஆனால் அவை உள்ளூர் மக்களிடம் சென்றடைவதற்கு, அவர்களுடைய விருப்பத் தெரிவுகள் மற்றும் தாக்கங்களை நன்கு புரிந்து கொண்டு சந்தை படுத்தல் வேண்டும். சில நேரங்களில் இத்தகைய பொருட்களுக்கு குறிப்பிட்ட சந்தையைப் பொறுத்து உள்ளூர் பகுதி பாதிப்பு மற்றும் மொழிகளின் ஆதாரங்கள் தேவைப்படலாம். இது போன்ற நிலைமைகளில் தேசிக்ரூவின் அனுபவம் வாய்ந்த குழுவினர் உங்கள் உற்பத்திப்பொருளை இந்திய மற்றும் உள்ளூர் சந்தை நிலவரப்படி பல்வேறு மொழிகளில் பயனரின் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து சந்தைப் படுத்த உதவலாம்.

இணையதள நெறிமுறைப்படுத்துதல்

நாம் வாழும் இந்த எண்முறை சகாப்தத்தில், உங்கள் நிறுவனத்தின் வலைத்தளம் வெளி உலகத்திற்கு உங்கள் நிறுவனத்தின் முகமாகும். உங்கள் வலைத்தளத்தில் இணைப்பு முறிவுகள், (பதிவு) ஏற்றும் பொழுது பிரச்சினைகள் மற்றும் தவறாக பெயரிடப்பட்ட பகுப்புகள் இருந்தால், உங்கள் வலைத்தளத்தின் வடிவமைப்பு ஏளனத்திற்கு ஆளாகிவிடும் மற்றும் அதனால் உங்கள் நிறுவனம் பாதிக்கப்படலாம். உங்கள் உருவம் நல்ல முறையிலும், தொழில் முறை நாணயத்துடனும், மற்றும் திறமையாகவும் இருக்கும் வகையில் செயதியறிவிக்க வேண்டும், அதற்காக தேசிக்ரூ நிறுவனத்தின் எங்கள் குழுவனர் உங்கள் தேவைக்கு ஏற்றவகையில் உங்கள் வலைதளத்தின் ஒவ்வொரு பகுப்பினையும் கூர்ந்து ஆராய்ந்து சோதனைகளை நடத்துவார்கள். நாங்கள் விடியோப்படங்கள், புகைப்படங்கள், படங்கள் போன்ற பொருட்கள் சரியாக வலைத்தளத்தில் ஏற்றுவதை சொதித்துப்பார்ப்போம், பகுப்புகள் சரியான முறையில் பெயரிடப்படுவதை உறுதி செய்வோம், மேலும் இணைப்புகள் தேவைக்கு ஏற்றாற்போல் சரியாகப் பணி புரியும் மேலும் நீங்கள் குறிப்பிட்டபடியே உங்கள் வலைத்தளத்தின் அனைத்து செய்முறைகளும் சரியாக செயல்படும்.

வழக்கு ஆய்வினைக் காணவும்

வாடிக்கை

எங்கள் சேவைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப் பெற்றதாகும்.உங்களுக்குத் தேவைப்படும் சேவைகள் புதிய வகையானதோ, அல்லது இதுவரை யாராலும் மேம்படுத்தப் படாததாகவோ இருந்தாலும், நாங்கள் உங்களுக்காக மிகவும் புதிய முறையில் உங்கள் தேவைக்கேற்ற செயல்முறையை உருவாக்கி, உடனுக்குடன் செயல்படுத்த தயாராக உள்ளோம். நீங்கள் எங்களிடம் சவால் விடுங்கள், மேலும் நாங்கள் உங்களுக்காக மற்றும் உங்களுக்கான சரியான தீர்வை கண்டுபிடித்து, உங்களுக்கு அற்பணிக்கிறோம். உங்களுடைய தேவைகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க தயவு செய்து எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் செலவே இல்லாத, ஒரு கடமையும் இல்லாத, மாதிரி முன்வடிவமைப்பு வேலைக்காக தயவு செய்து நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம், மேலும் நாங்கள் எங்கள் ஈடுபாட்டை உங்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டுவோம்

வழக்கு ஆய்வினைக் காணவும்

எங்கள் வேலைக்கான மாதிரி வேண்டுமாயின் எங்களுக்கு எழுதுங்கள். கட்டணம் எதுவுமின்றி, வேறு கட்டாயமும் இன்றி நாங்கள் செய்து தருவோம். அந்த வேலையில் எங்களது திறனில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படச் செய்ய நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.

வாடிக்கையாளர் வார்த்தைகள்

"செயல்படுத்தும் வேகம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் தேவைகளைப் புரிந்து கொள்வதும், பின்னர் அதற்கேற்ப அணுகுமுறைகளை அபிவிருத்தி செய்வதும் மிகவும் திருப்திகரமாக உள்ளது.""

"தேசிக்ரூ உண்மையிலேயே எங்களுக்கு மிகச் சிறப்பாக உதவி இருக்கிறார்கள். மேலும் 2008-ஆம் ஆண்டு ஜூன் 26-27 தேதிகளில் அவர்கள் செய்த அருமையான பணியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.... "

"தேசிக்ரூவின் திரு உண்மையிலேயே எங்களைப் புரிந்து கொண்டு, மிகவும் ஒத்துழைப்பு வழங்கினார். அவர்களின் தரம் மற்றும் செயல்முறை பயிற்சி குறித்து கூறுவதானால், அவர்களுடன் எங்களுக்கு எந்த சிக்கலும் ஏற்பட்டதே இல்லை. "

"தொழிலை விரிவாக்குவதில், நாங்கள் நிச்சயமாக அவர்களுடன் இணைந்து மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். "

" உங்களைப் (தேசிக்ரூவைப்) போன்ற சிறந்த தொழில்முறை அமைப்புடன் இணைந்திருப்பதில், இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. "

"உங்களது குழுவின் (தேசிக்ரூ) ஒவ்வொரு உறுப்பினரது அர்ப்பணிப்பு உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அவர்களது உண்மையான உழைப்பு மீது நாங்கள் அனைவரும் மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். "

பரிசோதனைரீதியாக, எங்கள் திட்டங்களில் ஒன்றில் செயல்பட நாங்கள் தேசிக்ரூவை நியமித்தோம். தொடக்கத்தில் பரிசோதனையாக கருதப்பட்ட ஒன்று, பின்னர் சிறந்த பலன்களுடன் வெற்றிகரமான ஒன்றாக மாறியது.... "

தேசிக்ரூ அதன் பணிமுறையின் மூலமாக, ஆழமான அர்பணிப்பையும், ஒழுங்கமைப்பையும் எடுத்துக்காட்டி உள்ளது. எந்தளவிற்கு என்றால், எங்கள் வெற்றியில் தேசிக்ரூவும் ஓர் உள்ளார்ந்த பாகமாக மாறிவிட்டது. "

ஒவ்வொரு புதிய காலாண்டிலும், அவர்களின் சேவைத்தரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்பதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் எதிர்கால திட்டங்களில் தேசிக்ரூ நிச்சயம் இடம் பெற்றிருக்கும். "

தேசிக்ரூவின் அனுகூலங்கள்

தேசிக்ரூவும், அதன் குழு உறுப்பினர்களும்

தொழிலுக்கான எங்களின் மதிப்பார்ந்த அணுகுமுறை, எங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கும் (வாடிக்கையாளர்கள், மக்கள், சமூகம் மற்றும் தொழில்) முழுமையான இலாபங்களை அளிப்பதுடன், தேவையான சமூக மாற்றங்களையும் உருவாக்கி அளிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us