About Us Who we are!

The Adobe Creative Suite 3 Video Workshop offers over 200 training videos covering a wide range of subjects for print, web, and video professionals.

சமூக தாக்கவிளைவு

தேசிக்ரூ நிறுவனம் இந்தியாவில் சமூக, பொருளாதார மற்றும் புவியியல் காரணங்களுக்காக தாழ்த்தப்பட்ட, பின்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த படித்த ஏழை மக்கள் அறிவாற்றல் நிறைந்த பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற இலட்ச்சியத்துடன் இயங்கிவருகிறது.

ததேசிக்ரூ நிறுவனத்தில் பணி புரிந்துவரும் ஊழியர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தற்பொழுது அடைந்துவரும் ஆதாயங்களை கண்கூடாகவே நாம் காணலாம். அவர்களுடைய வருவாய் விகிதம் கூடுதலாக உள்ளதால், அவர்களுடைய அடிப்படை தேவைகள் சரி செய்யப்பட்டு, உபரி வருமானத்தை அவர்கள் வீடு, மனை வாங்குவதிலும், குழந்தைகளின் மேற்படிப்புக்காகவும் செலவிடுகின்றனர். நமது நிறுவனத்தில் பணி புரிபவர்கள் அவர்கள் புரியும் பணியை ‎மிகவும் பெருமையுடன் போற்றுகிறார்கள். அவர்கள் தேசிக்ரூ ‎நிறுவனத்தின் மூலமாக புதியதாக வளர்த்துக்கொண்ட ‎திறமைகள், அவர்களுக்கு மேலும் ‎உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, அவர்களுடைய தன்னம்பிக்கை ‎மேலும் உயர்ந்துள்ளது மற்றும் எதிர்காலக் கனவுகளை ‎நனவாக்கும் உற்சாகமான மன நிலையில் காணப்படுகின்றனர். இது போன்ற அனைத்துக் காரணிகளும் கிராமத்தில் இருந்து பணி புரியும் மக்களை கிராமத்திலேயே தொடர்ந்து வசிப்பதற்கும், அங்கிருந்தே பணி புரிவதற்குமான வாய்ப்பை ஏற்படுத்தி, வேலை வாய்ப்புகளுக்காக கிராமங்களுக்கே திரும்பிச்செல்லும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.

பெரிய அளவில் இதனை கூர்ந்து கவனித்தால், கிராமத்தில் இருந்து வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் (பிபிஒ) நிறுவனங்கள் செயல்படுவதால், மேலும் சாதகமான தாக்க விளைவுகளுக்கு வழி வகுப்பதாகும், இந்தியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70% மக்கள் கிராமங்களில் இருந்தே வருகிறார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 50 மக்கள் தொடர்ந்து 1000 நகரங்கள் / கிராமங்களில் இருந்து மாதம் ரூபாய்.5,000 (~100 அமெரிக்க டாலர்கள்) வருவாய் ஈட்டினால்- அதாவது ரூபாய்.250 மில்லியன் (~5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஒவ்வொரு மாதமும் உள்ளூர் சமூகத்தினருக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் வருவாயாக வந்து சேரும் என்பது தெளிவாகும்.ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, மாதம் தோறும் சராசரியாக இந்த உழைப்பாளிகளின் குடும்பத்தினருக்கு ரூபாய்.1,500 வரை (~30 அமெரிக்க டாலர்கள்) வருவாயாக கிடைக்கும்.

எங்கள் வணிகம் இது போன்ற சமுதாய இலட்ச்சியத்துடன் செயல்படுவதால், நாங்கள் எங்களுடைய வணிக முன்வடிவினை குவிமையமாக வைத்து கிராமத்தின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தவே பாடுபட நினைக்கிறோம், கிராமத்தில் இருந்து வளங்கள் மற்றும் செல்வங்களை சூறையாடுவது எங்கள் நோக்கமல்ல.

சேவைகள்

காப்பீட்டுத்துறை, சந்தை ஆய்வு, இணையம் & செல்பேசி சேவை, மின்-அரசாக்கம் மற்றும் சமூகம்சார் சேவைகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் உலக தரம்மிக்க சேவைகளை அளிக்க, எங்களின் கிராமப்புற தொழிற்சேவை வடிவமானது மக்களையும், செயல்முறைகளையும், தொழில்நுட்பத்தையும் தாங்கி பிடிக்கிறது.

மேலும் அறிய
Got a Question? Get in touch with us