தேசிக்ரூ ஏன்
எங்களுடைய மாதிரி முன்வடிவமானது குறைந்த செலவில், முழுக்க முழுக்க வாடிக்கையாளரை மையமாகக்கொண்டு, தரமான சேவைகளை வழங்குவதை குவிமையமாகக் கொண்டு, சமூக உணர்வு மற்றும் பொறுப்புடன் வழங்கப்பட்டுவரும் பிபிஒ சேவைகளை, கிராமத்தில் மற்றும் பகுதி நகரப்பகுதிகளில் வாழும் படித்த இளம் மக்களுக்கு ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்கள் முன்னேற்றம் அடைவதை குறிக்கோளாகக் கொண்டு செயல் படும் நிறுவனமாகும்.
இந்தியாவின் உள்நாட்டுச் சந்தை விரிவடைந்து பகுதி நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் எட்டும் பொழுது, நாங்கள் எங்களை நாடிவரும் வருங்கால வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவுகளுடன் கூடிய மற்றும் தனிப்பட்ட மரபு சார்ந்த பின்-நுனி அலுவலக சேவைகள் வழங்க உறுதியுடன் கடமைப் பட்டுள்ளோம்.

வாடிக்கையாளர்களுக்கு
- உபரி செலவுகள் குறைவாக இருப்பதால், மொத்த செலவுகளும் குறைந்து, வரம்புக்குள் உட்படுவது.
- தொழில் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ற வகையிலான வளையும் தன்மையுடன் கூடிய பணியாளர்கள்
- தனிப்பட்ட வகையிலான பணியாளர்களின் தேர்வு, பயிற்சி, மற்றும் சான்றிதழுடன் கூடிய பயிற்சிக்கான திட்டங்கள், போன்றவைகளால் பணியாளர்கள் மேலும் திறமைகளை வளர்த்து, சிக்கலான திட்டங்களை செயலாக்க முன்வருதல்
- ஆக்கச் சிந்தனைகள் மற்றும் திறம் வாய்ந்த மென்பொருள் பயன்பாட்டினால் ஆவணங்களை துல்லியமாகவும் எளிதாகவும் மாற்றியமைக்க உதவும் மென்பொருள்
- பல இந்திய மொழிகளில் சேவைகள் வழங்க இயலும் தன்மை
- எளிதாக முற்றிலும் கிராமப்புறத்து சந்தைகளை அடைதல்
- கொடுத்த வாக்குப்படி 100% சொன்ன நேரத்திற்குள் திட்டப் பணிகளை முடித்துக் கொடுப்பதற்கான உள்கட்டமைப்பு
மக்களுக்கான ஆதாயங்கள்
- கணினி சார்ந்த மற்றும் கணினி சம்பந்தப்பட்ட புதிய தொழில்களை உருவாக்குதல்
- வேளாண் தொழில் சார்ந்த இடப்பகுதிகளில் பாதுகாப்புடன் கூடிய வருவாய் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்
- அவரவர்கள் வீட்டிலேயே தங்கிக்கொண்டு புதிய வேலைகள் புரிவதால் உயர்ந்து வரும் சேமிப்பு விகிதம்
- ஒவ்வொரு வீட்டிலும் அதிக அளவிலான வருவாய் மற்றும் சேமிப்பு விகிதம் காரணம் உயரும் சமூக அந்தஸ்து, சமூக நிகழ்வுகளில் பங்கேற்பு மற்றும் உயர்கல்விக்கான நாட்டம்.
- சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய ஒரு உயர்வு, அதனால் மக்கள் மேலும் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டு இளம் வயதினர் சம்பாதித்து தமது செலவுகளை அவர்களே மேற்கொள்வது மற்றும் திருமணம் / மற்றும் மேல் படிப்பில் கவனம் செலுத்துதல்.
- தன நம்பிக்கை உயர உயர எதிர்கால கனவுகள் மற்றும் திட்டங்களை ஆக்கத்துடன் செயல்படுத்தும் திறமையை வளர்த்துக்கொள்வது
- மக்கள் கிராமங்களில் இருந்து நாடுகளை நோக்கி செல்லும் வழக்கம் குறைந்து, அவர்கள் தமது கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பல வழிகளில் பங்கேற்று பங்களித்தல்
சமூகத்தினருக்கு
- தகுதியுடன் கூடிய இளைஞர்கள் வேலை வாய்ப்பைத் தேடி நகரங்களுக்கு செல்லும் நிலமை மாறி, அவர்கள் மீண்டும் தமது கிராமத்திலேயே வசித்து, தமது சமூகத்தினரின் இடையிலேயே தொடட்ந்து வாழ்ந்து மேம்பாடு காணும் வகையிலான வெள்ளைச் சட்டைப் பணிகளின் உருவாக்கம்
- உள்ளூர் மக்கள் உள்ளூர் சமூகத்தில் சொத்துக்கள் சேர்ப்பது
- சமூகத்தினர் ஓர் ஒளிமயமான எதிர் காலத்திற்கான வழிமுறையை கண்டு பெருமிதம் அடைதல்
வணிகத்திற்கு
- உள்ளூர் மக்களே உள்ளூர் வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் வேலையை விட்டு வேறு வேலை தேடுவதோ அல்லது குடி பெயர்ந்து போவதோ குறைவு
- உபரி செலவுகள் குறைவதால் மொத்த செலவுகளும் குறைந்து, தொழிலில் மேலும் போட்டி இடும் தன்மை வளர்த்தல்
- கிராமப்புற வணிகச் செயலாக்க அயலாக்கம் தொழில் (பிபிஒ) முன்வடிவைப் பின்பற்றி புதிய தொழில் முனைவோருக்கு ஊக்கமளித்தல் மற்றும் புதிய கிராம அடிப்படையிலான சந்தைகள் மற்றும் வேலை வாய்ப்பு திட்டங்கள் உருவாக்கம் மற்றும் செயலாக்கம்
- புதிய சந்தைகள் உருவாக்குதல் மற்றும் நகர சந்தைகள் விரிவடைந்து சிறு ஊர்கள் மற்றும் கிராமத்திற்குள் நுழைவது, மற்றும் உள்ளூர் சந்தைகளில் கூடுதல் பணப்புழக்கம் ஏற்படும் நிலைமை

